• Apr 20 2026

ஹோர்மூஸ் நீரிணையைக்கடக்க சீன யுவானில் பணம் செலுத்திய இந்தியா - தீவிரமடையும் போர்!

shanu / Mar 23rd 2026, 10:18 am
image


இந்திய எண்ணெய் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்வதற்காக ஈரானுக்கு சீன யுவானில் பணம் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஈரான்-அமெரிக்கப் போர்  ஆரம்பித்து தற்போது தீவிரமடைந்து வருகின்றது. போர் ஆரம்பித்த இரண்டு, மூன்று நாள்களில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் மையங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றன. 


அதிரடித் தாக்குதல்களால் எரிபொருள் தாங்கிய கப்பல்கள் கொண்டு செல்லும் மிக முக்கிய வழியான ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டது. 


இதனால் இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று நீண்ட வரிசையில் காத்திருந்ததும் தற்போது எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 


போர் தீவிரமடைந்து வரும் நிலையில் எண்ணெய் கப்பல்களை தமது நாடுகளுக்குக் கொண்டு செல்ல அனைத்து நாடுகளும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. 


அண்மையில் கூட இலங்கைக்கு எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று வந்தடைந்தது. இந்த நிலையில் தான் இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல முற்பட்டது. 


எனினும் கப்பலை கடந்து செல்ல அனுமதி வழங்க  ஈரானுக்கு சீன யுவானில் இந்தியா பணம் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 


சீன யுவானில் பணம் செலுத்தப்பட்ட பின்னரே இந்திய எண்ணெய் கப்பல் ஈரானிய ஹோர்முஸை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளது. 


முன்னர் எந்தவொரு வர்த்தக ஏற்றுமதி, இறக்குமதிகள் அமெரிக்க டொலரில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. 


தற்போது ஈரான் - அமெரிக்கா போர் தீவிரமடைந்துள்ளதால் அமெரிக்காவுடனான வர்த்தக நடவடிக்கைகள், ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 


இதற்கமையவே டொலரை ஓரங்கட்டி சீன யுவானில் ஈரான் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. 


இது இவ்வாறு இருந்தால் அமெரிக்க டொலரின் நிலை என்னாகும் என்ற கேள்விகள் வரிசையில் எழுந்துள்ளன. 


இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் ஒவ்வொன்றாகத் தகர்க்கப்படும்' என அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி காலக்கெடு விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹோர்மூஸ் நீரிணையைக்கடக்க சீன யுவானில் பணம் செலுத்திய இந்தியா - தீவிரமடையும் போர் இந்திய எண்ணெய் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்வதற்காக ஈரானுக்கு சீன யுவானில் பணம் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான்-அமெரிக்கப் போர்  ஆரம்பித்து தற்போது தீவிரமடைந்து வருகின்றது. போர் ஆரம்பித்த இரண்டு, மூன்று நாள்களில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் மையங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றன. அதிரடித் தாக்குதல்களால் எரிபொருள் தாங்கிய கப்பல்கள் கொண்டு செல்லும் மிக முக்கிய வழியான ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால் இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று நீண்ட வரிசையில் காத்திருந்ததும் தற்போது எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. போர் தீவிரமடைந்து வரும் நிலையில் எண்ணெய் கப்பல்களை தமது நாடுகளுக்குக் கொண்டு செல்ல அனைத்து நாடுகளும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. அண்மையில் கூட இலங்கைக்கு எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று வந்தடைந்தது. இந்த நிலையில் தான் இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல முற்பட்டது. எனினும் கப்பலை கடந்து செல்ல அனுமதி வழங்க  ஈரானுக்கு சீன யுவானில் இந்தியா பணம் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன யுவானில் பணம் செலுத்தப்பட்ட பின்னரே இந்திய எண்ணெய் கப்பல் ஈரானிய ஹோர்முஸை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னர் எந்தவொரு வர்த்தக ஏற்றுமதி, இறக்குமதிகள் அமெரிக்க டொலரில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது ஈரான் - அமெரிக்கா போர் தீவிரமடைந்துள்ளதால் அமெரிக்காவுடனான வர்த்தக நடவடிக்கைகள், ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கமையவே டொலரை ஓரங்கட்டி சீன யுவானில் ஈரான் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. இது இவ்வாறு இருந்தால் அமெரிக்க டொலரின் நிலை என்னாகும் என்ற கேள்விகள் வரிசையில் எழுந்துள்ளன. இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் ஒவ்வொன்றாகத் தகர்க்கப்படும்' என அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி காலக்கெடு விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement