• Apr 20 2026

எரிபொருள் விலை அதிகரிப்பு ஒரு 'கறுப்புச் சந்தை சூதாட்டம்' - அநுரவை விமர்சித்த விமல் வீரவன்ச!

Chithra / Mar 23rd 2026, 10:25 am
image

தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அசாதாரண எரிபொருள் விலை அதிகரிப்பு, மக்களைத் துன்புறுத்தும் ஒரு "கறுப்புச் சந்தை சூதாட்டம்" என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


அரசாங்கம் பழைய எரிபொருள் கையிருப்புகளை வைத்துக்கொண்டு, புதிய விலையில் அவற்றை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுவதாக வீரவன்ச குற்றம் சுமத்தினார். 


குறைந்த விலையில் கொண்டுவரப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே சனிக்கிழமையன்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மூடப்பட்டது. 


அந்தப் பழைய கையிருப்புகளை வைத்துக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் 'புனர்வாழ்வு விலை' என்ற பெயரில் விலையை அதிகரித்துள்ளனர். 


இது ஒரு மாட்டை இரண்டு முறை உரிப்பதற்குச் சமமான செயலாகும். அநுர குமார தற்போது ஒரு கொடூரமான கறுப்புச் சந்தை முதலாளியின் நிலைக்கு வந்துள்ளார் என அவர் தெரிவித்தார்.   

எரிபொருள் விலை அதிகரிப்பு ஒரு 'கறுப்புச் சந்தை சூதாட்டம்' - அநுரவை விமர்சித்த விமல் வீரவன்ச தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அசாதாரண எரிபொருள் விலை அதிகரிப்பு, மக்களைத் துன்புறுத்தும் ஒரு "கறுப்புச் சந்தை சூதாட்டம்" என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அரசாங்கம் பழைய எரிபொருள் கையிருப்புகளை வைத்துக்கொண்டு, புதிய விலையில் அவற்றை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுவதாக வீரவன்ச குற்றம் சுமத்தினார். குறைந்த விலையில் கொண்டுவரப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே சனிக்கிழமையன்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மூடப்பட்டது. அந்தப் பழைய கையிருப்புகளை வைத்துக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் 'புனர்வாழ்வு விலை' என்ற பெயரில் விலையை அதிகரித்துள்ளனர். இது ஒரு மாட்டை இரண்டு முறை உரிப்பதற்குச் சமமான செயலாகும். அநுர குமார தற்போது ஒரு கொடூரமான கறுப்புச் சந்தை முதலாளியின் நிலைக்கு வந்துள்ளார் என அவர் தெரிவித்தார்.   

Advertisement

Advertisement

Advertisement