• May 11 2024

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்..!

Sharmi / Feb 26th 2024, 9:27 am
image

Advertisement

கடற்றொழிலாளர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் விசேட சந்திப்பு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று(25) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்தியா- இலங்கை இடையேயான ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இரு தரப்பு கடற்றொழிலாளர்களின் நலன்சார்ந்து மனிதாபிமான முறையில் கடற்றொழிலாளர் பிரச்சினையை அணுகுமாறு இந்தியத் தூதுவர் இதன்போது வலியுறுத்தினார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் இந்தியாவால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள். கடற்றொழிலாளர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் விசேட சந்திப்பு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று(25) மாலை இடம்பெற்றுள்ளது.இதன்போது கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்தியா- இலங்கை இடையேயான ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.இரு தரப்பு கடற்றொழிலாளர்களின் நலன்சார்ந்து மனிதாபிமான முறையில் கடற்றொழிலாளர் பிரச்சினையை அணுகுமாறு இந்தியத் தூதுவர் இதன்போது வலியுறுத்தினார்.மேலும், வடக்கு மாகாணத்தில் இந்தியாவால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement