• Feb 05 2025

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி- புதிய சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா!

Tamil nila / Dec 7th 2024, 7:42 am
image

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 54 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் 37 ரன்களும், ஷுப்மன் கில் 31 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலாண்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 86 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டினை ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தினார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஓராண்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

நேற்று  தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடும் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பிறந்த நாளில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஜஸ்பிரித் பும்ராவுக்கு முன்பாக, இந்த சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கபில் தேவ் மற்றும் ஜாகீர் கான் இருவரும் படைத்துள்ளனர்.

இந்திய அணிக்காக கடந்த 1983 ஆம் ஆண்டில் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் கபில் தேவ் 75 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 1979 ஆம் ஆண்டில் 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டில் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாகீர் கான் இந்திய அணிக்காக 51 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய ஜஸ்பிரித் பும்ரா, 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி- புதிய சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 54 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் 37 ரன்களும், ஷுப்மன் கில் 31 ரன்களும் எடுத்தனர்.ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலாண்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 86 ரன்கள் எடுத்துள்ளது.முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டினை ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தினார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஓராண்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.நேற்று  தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடும் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பிறந்த நாளில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.இந்த ஆண்டில் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஜஸ்பிரித் பும்ராவுக்கு முன்பாக, இந்த சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கபில் தேவ் மற்றும் ஜாகீர் கான் இருவரும் படைத்துள்ளனர்.இந்திய அணிக்காக கடந்த 1983 ஆம் ஆண்டில் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் கபில் தேவ் 75 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 1979 ஆம் ஆண்டில் 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டில் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாகீர் கான் இந்திய அணிக்காக 51 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய ஜஸ்பிரித் பும்ரா, 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement