இலங்கைக்கு வரவுள்ள சீன உளவுக் கப்பலுக்கு அனுமதியளிக்கக்கூடாது என இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா எச்சரிக்கை விடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எ.ஸ் ராமதாஸ் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சீனாவிலிருந்து புறப்பட்டுள்ள சி யான் 6 உளவுக் கப்பல் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ள நிலையில், 17 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளமை அதிர்ச்சியளிப்பதாக ளு.ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
சீன உளவுக் கப்பலின் ஆராய்ச்சியானது, தென் மாநிலங்களை உளவு பார்க்கும் செயற்பாடு என்பதால், இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு இது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக எ.ஸ் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி சீன கப்பலுக்கு தாம் அனுமதி அளிக்காதது போல இலங்கை அரசு காட்டிக்கொள்வதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன உளவுக் கப்பலுக்கு அனுமதியளிக்கக் கூடாது - இலங்கையை எச்சரிக்கும் இந்தியா. samugammedia இலங்கைக்கு வரவுள்ள சீன உளவுக் கப்பலுக்கு அனுமதியளிக்கக்கூடாது என இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா எச்சரிக்கை விடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எ.ஸ் ராமதாஸ் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "சீனாவிலிருந்து புறப்பட்டுள்ள சி யான் 6 உளவுக் கப்பல் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ள நிலையில், 17 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளமை அதிர்ச்சியளிப்பதாக ளு.ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.சீன உளவுக் கப்பலின் ஆராய்ச்சியானது, தென் மாநிலங்களை உளவு பார்க்கும் செயற்பாடு என்பதால், இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு இது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக எ.ஸ் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி சீன கப்பலுக்கு தாம் அனுமதி அளிக்காதது போல இலங்கை அரசு காட்டிக்கொள்வதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் சுட்டிக்காட்டியுள்ளார்.