கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான புகையிரத சேவை இன்று (19) வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
காட்டு யானைக்கூட்டம் புகையிரதத்தில் மோதியதால் பழுதடைந்த ரயில் பாதையை சீரமைத்த பின்னர் குறித்த புகையிரத சேவைகள் மீண்டும் தொடங்கியது.
கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற புகையிரதம் மின்னேரியா மற்றும் ஹிகுராக்கொட பகுதிக்கு இடைப்பட்ட ரொட்டவ்வ பிரதேசத்தில் காட்டு யானைக் கூட்டத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு - மட்டக்களப்பு புகையிரத சேவை வழமைக்கு. கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான புகையிரத சேவை இன்று (19) வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.காட்டு யானைக்கூட்டம் புகையிரதத்தில் மோதியதால் பழுதடைந்த ரயில் பாதையை சீரமைத்த பின்னர் குறித்த புகையிரத சேவைகள் மீண்டும் தொடங்கியது.கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற புகையிரதம் மின்னேரியா மற்றும் ஹிகுராக்கொட பகுதிக்கு இடைப்பட்ட ரொட்டவ்வ பிரதேசத்தில் காட்டு யானைக் கூட்டத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.