• Apr 07 2025

மின்சாரம், எரிபொருளுக்காக இந்தியாவிடம் கையேந்த வேண்டிய நிலை வரும்; தொழில் வாய்ப்புக்களும் பறிபோகும்! - எச்சரித்த விமல் வீரவன்ச

Chithra / Dec 19th 2024, 9:18 am
image

எட்கா ஒப்பந்தத்தின் ஊடாக எதிர்கால சந்ததியினரின் தொழில் வாய்ப்புக்களை பறிப்பதற்கான சதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் வலு மின் தொகுப்பை நிறுவ இணக்கம் காணப்பட்டதாக இரு தலைவர்களதும் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பங்களாதேஷ் அவசர நிலைமையின் போது அதானியிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்தது. பின்னர் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டதால், முழு நாடும் இருளடைந்தது. இலங்கையிலும் தற்போது வலுசக்தி துறையுடன் விளையாட ஆரம்பித்துள்ளனர். இது மிகவும் பாரதூரமானதாகும். 

எதிர்காலத்தில் மின்சாரத்துக்காக இந்தியாவிடம் கையேந்த வேண்டிய நிலைமைக்கு உள்ளாக்குவதற்கான நடவடிக்கைகளே இதன் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.

மலிவான, நம்பகமான எரிசக்தியை வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பல்பொருள் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான ஒத்துழைப்பு என்ற ஒரு விடயமும் அந்த கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஊடாக எரிபொருளுக்காகவும் நாம் முழுமையாக இந்தியாவை தங்கியிருக்க வேண்டிய நிலைமையே ஏற்படும். 

எனவே மேற்குறிப்பிடப்பட்ட இந்த குழாய் திட்டம் ஒருபோதும் இலங்கையின் எரிபொருள் துறைக்கு பாதுகாப்பானதாக அமையப்போவதில்லை. அது மாத்திரமின்றி தோல்வியடைந்த வலுசக்தி துறையை தோற்றுவிப்பதாகவும் இத்திட்டம் அமையும்.

எதிர்காலத்தில் இந்தியாவுக்கு சாதகமான ஆட்சி முறை இலங்கையில் ஏற்படாவிட்டால், அதில் தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு இந்த குழாய் திட்டங்களைப் பயன்படுத்தக் கூடும்.

இந்திய ஆக்கிரமிப்பு தொடர்பில் இலங்கைக்கு கற்றுக் கொடுத்த ரோஹண விஜேவீரவின் நாமத்தைப் பயன்படுத்துபவர்களின் ஆட்சியின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமையே பாரிய பேரிடராகும். 

இலங்கையின் வலுசக்தி துறையில் தலையிடுவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனக் கூறியவர்கள், இன்று இந்தியாவுக்கு சென்று வலுசக்தி மற்றும் மின்சக்தி துறையை காட்டிக் கொடுத்துள்ளனர்.

இதேவேளை எட்கா ஒப்பந்தம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்திய தொழிலாளர்கள் இலங்கையின் தொழில் சந்தைகளுக்குள் கட்டுப்பாடின்றி பிரவேசிக்க முடியும். 

தமிழ்நாட்டிலுள்ள ஒருவர் எவ்வாறு கடவுச்சீட்டு இன்றி டில்லிக்கு சென்று தொழிலில் ஈடுபட முடியுமோ, அதேபோன்று இலங்கைக்குள்ளும் பிரவேசிக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.

பொது மக்கள் இது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கான தொழில் வாய்ப்புக்களை பறிப்பதற்கான ஆரம்பமே இதுவாகும். இதற்கு எதிராக நாம் குரல்கொடுப்போம் என்றார். 

மின்சாரம், எரிபொருளுக்காக இந்தியாவிடம் கையேந்த வேண்டிய நிலை வரும்; தொழில் வாய்ப்புக்களும் பறிபோகும் - எச்சரித்த விமல் வீரவன்ச எட்கா ஒப்பந்தத்தின் ஊடாக எதிர்கால சந்ததியினரின் தொழில் வாய்ப்புக்களை பறிப்பதற்கான சதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் வலு மின் தொகுப்பை நிறுவ இணக்கம் காணப்பட்டதாக இரு தலைவர்களதும் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அவசர நிலைமையின் போது அதானியிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்தது. பின்னர் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டதால், முழு நாடும் இருளடைந்தது. இலங்கையிலும் தற்போது வலுசக்தி துறையுடன் விளையாட ஆரம்பித்துள்ளனர். இது மிகவும் பாரதூரமானதாகும். எதிர்காலத்தில் மின்சாரத்துக்காக இந்தியாவிடம் கையேந்த வேண்டிய நிலைமைக்கு உள்ளாக்குவதற்கான நடவடிக்கைகளே இதன் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.மலிவான, நம்பகமான எரிசக்தியை வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பல்பொருள் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான ஒத்துழைப்பு என்ற ஒரு விடயமும் அந்த கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் ஊடாக எரிபொருளுக்காகவும் நாம் முழுமையாக இந்தியாவை தங்கியிருக்க வேண்டிய நிலைமையே ஏற்படும். எனவே மேற்குறிப்பிடப்பட்ட இந்த குழாய் திட்டம் ஒருபோதும் இலங்கையின் எரிபொருள் துறைக்கு பாதுகாப்பானதாக அமையப்போவதில்லை. அது மாத்திரமின்றி தோல்வியடைந்த வலுசக்தி துறையை தோற்றுவிப்பதாகவும் இத்திட்டம் அமையும்.எதிர்காலத்தில் இந்தியாவுக்கு சாதகமான ஆட்சி முறை இலங்கையில் ஏற்படாவிட்டால், அதில் தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு இந்த குழாய் திட்டங்களைப் பயன்படுத்தக் கூடும்.இந்திய ஆக்கிரமிப்பு தொடர்பில் இலங்கைக்கு கற்றுக் கொடுத்த ரோஹண விஜேவீரவின் நாமத்தைப் பயன்படுத்துபவர்களின் ஆட்சியின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமையே பாரிய பேரிடராகும். இலங்கையின் வலுசக்தி துறையில் தலையிடுவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனக் கூறியவர்கள், இன்று இந்தியாவுக்கு சென்று வலுசக்தி மற்றும் மின்சக்தி துறையை காட்டிக் கொடுத்துள்ளனர்.இதேவேளை எட்கா ஒப்பந்தம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்திய தொழிலாளர்கள் இலங்கையின் தொழில் சந்தைகளுக்குள் கட்டுப்பாடின்றி பிரவேசிக்க முடியும். தமிழ்நாட்டிலுள்ள ஒருவர் எவ்வாறு கடவுச்சீட்டு இன்றி டில்லிக்கு சென்று தொழிலில் ஈடுபட முடியுமோ, அதேபோன்று இலங்கைக்குள்ளும் பிரவேசிக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.பொது மக்கள் இது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கான தொழில் வாய்ப்புக்களை பறிப்பதற்கான ஆரம்பமே இதுவாகும். இதற்கு எதிராக நாம் குரல்கொடுப்போம் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now