• Sep 08 2024

இலங்கையில் கால் பதிக்கப்போகும் ரஷ்ய - இந்திய நிறுவனங்கள்..! கைமாறும் மத்தள விமான நிலையம்

Chithra / Feb 28th 2024, 3:40 pm
image

Advertisement

 

ஹம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்தின் திட்டத்தை 02 வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனம் ஒன்று கூட்டாக இணைந்து இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த நிறுவனங்களின் நிர்வாகத்துடன் பல தடவைகள் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அந்த கலந்துரையாடல்கள் பலனளித்துள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ரஷ்ய - இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திற்கு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மாற்றுவது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ரஷ்ய - இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் மத்தள விமான நிலையத்தின் இலாபத்தில் ஒரு பங்கை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் வகையிலான ஒப்பந்தமொன்று எதிர்வரும் நாட்களில் கைச்சாத்திடப்படுமென ருவன்சந்திர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கால் பதிக்கப்போகும் ரஷ்ய - இந்திய நிறுவனங்கள். கைமாறும் மத்தள விமான நிலையம்  ஹம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்தின் திட்டத்தை 02 வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனம் ஒன்று கூட்டாக இணைந்து இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.அத்தோடு, குறித்த நிறுவனங்களின் நிர்வாகத்துடன் பல தடவைகள் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அந்த கலந்துரையாடல்கள் பலனளித்துள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, ரஷ்ய - இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திற்கு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மாற்றுவது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், ரஷ்ய - இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் மத்தள விமான நிலையத்தின் இலாபத்தில் ஒரு பங்கை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் வகையிலான ஒப்பந்தமொன்று எதிர்வரும் நாட்களில் கைச்சாத்திடப்படுமென ருவன்சந்திர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement