• Jun 28 2024

தாய் சித்திரவதை புரிவதாக யாழில் தஞ்சமடைந்த இந்திய சிறுவன் - விசாரணையில் வெளியான தகவல்

Chithra / Jun 24th 2024, 12:24 pm
image

Advertisement


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் ஒருவர், தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் தன்னை அடித்து சித்திரவதை புரிவதாக கூறி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்துள்ளார்.

சிறுவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது, 

சிறுவன் வடஇந்தியாவை சேர்ந்தவர் எனவும், அவனது தாய் கொழும்பில் கஸீனோவில் வேலை செய்வதாகவும், இங்கு இலங்கையைச் சேர்ந்த நபருடன் தங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதேவேளை, சிறுவன் மன்னார் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியா செல்வதற்கு திட்டமிட்டு, கொழும்பில் இருந்து வெளியேறி மன்னார் பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏறியமையால், யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வந்த சிறுவனுக்கு எங்கே செல்வது என தெரியாததால், பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். 

சிறுவனின் தாயை பொலிஸார் யாழ்ப்பாணம் அழைத்து விசாரணை செய்த வேளை, சிறுவன் செய்யும் தவறுகளுக்கு தான் அவரைத் தண்டிப்பதாக கூறியுள்ளார். 

அதனை அடுத்து சிறுவனை சமரசப்படுத்தி, தாயாரையும் எச்சரித்த பொலிஸார், சிறுவனை தாயாருடன் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தாய் சித்திரவதை புரிவதாக யாழில் தஞ்சமடைந்த இந்திய சிறுவன் - விசாரணையில் வெளியான தகவல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் ஒருவர், தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் தன்னை அடித்து சித்திரவதை புரிவதாக கூறி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்துள்ளார்.சிறுவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது, சிறுவன் வடஇந்தியாவை சேர்ந்தவர் எனவும், அவனது தாய் கொழும்பில் கஸீனோவில் வேலை செய்வதாகவும், இங்கு இலங்கையைச் சேர்ந்த நபருடன் தங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.அதேவேளை, சிறுவன் மன்னார் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியா செல்வதற்கு திட்டமிட்டு, கொழும்பில் இருந்து வெளியேறி மன்னார் பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏறியமையால், யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.யாழ்ப்பாணம் வந்த சிறுவனுக்கு எங்கே செல்வது என தெரியாததால், பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். சிறுவனின் தாயை பொலிஸார் யாழ்ப்பாணம் அழைத்து விசாரணை செய்த வேளை, சிறுவன் செய்யும் தவறுகளுக்கு தான் அவரைத் தண்டிப்பதாக கூறியுள்ளார். அதனை அடுத்து சிறுவனை சமரசப்படுத்தி, தாயாரையும் எச்சரித்த பொலிஸார், சிறுவனை தாயாருடன் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement