• May 18 2024

இந்திய மீனவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை எல்லை தாண்டி வந்தால் அவர்களுக்கு தண்டனை...! அமைச்சர் டக்ளஸ் உறுதி...!

Sharmi / Feb 27th 2024, 2:27 pm
image

Advertisement

2018ஆம் ஆண்டு அரசியல் யாப்பு சட்டத்தில், முதற்தடவையாக எல்லை தாண்டி வந்தால் அவர்களுக்கு பிணை வழங்க முடியும் என்றும்இ ஒன்றுக்கு மேற்பட்ட தடவை எல்லை தாண்டி வரும்போது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் சிறை வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மீனவர்கள் போராட்டம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் போராட்டம் நடாத்துவது அவர்களுடைய உரிமை. அவர்களுடைய கோரிக்கை. ஆனால் நாங்கள் அதனை சட்டரீதியாக பார்க்க வேண்டும்.

2018ஆம் ஆண்டு அரசியல் யாப்பு சட்டத்தில், முதற்தடவையாக எல்லை தாண்டி வந்தால் அவர்களுக்கு பிணை வழங்க முடியும் என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை எல்லை தாண்டி வரும்போது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றுள்ளது.

இந்த தடவை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் எல்லை தாண்டி வந்தவர்களும், படகின் உரிமையாளர் அல்லது படகோட்டியும் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அது அவர்களுக்கு சுட்டுவிட்டது.

ஏனெனில், அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை எல்லை தாண்டி வருகின்றபோது தண்டிக்கப்படுவார்கள் என்ற வகையில் தமது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

என்னை பொறுத்தவரையில் எங்களுடைய நாடு, எங்களுடைய மக்கள், எங்களுடைய கடல் இதுதான் எனது முன்னுரிமை. அதுதான் நியாயம் என்றும் நான் கருதுகிறேன்.

இதேவேளை, இலங்கை மீனவர்கள் 3ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் குறித்து தங்களது நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை, 

நான் அமைச்சரவையில் இருக்கிறேன். நான் இன்னும் இராஜினாமா செய்யாதபடியால் அதில் நேரடியாக கலந்துகொள்ள மாட்டேன். அதற்கிடையில் நான் இராஜினாமா செய்தால் நானும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்வேன் எனவும் தெரிவித்தார்.



இந்திய மீனவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை எல்லை தாண்டி வந்தால் அவர்களுக்கு தண்டனை. அமைச்சர் டக்ளஸ் உறுதி. 2018ஆம் ஆண்டு அரசியல் யாப்பு சட்டத்தில், முதற்தடவையாக எல்லை தாண்டி வந்தால் அவர்களுக்கு பிணை வழங்க முடியும் என்றும்இ ஒன்றுக்கு மேற்பட்ட தடவை எல்லை தாண்டி வரும்போது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இந்திய மீனவர்கள் சிறை வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மீனவர்கள் போராட்டம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.இந்திய மீனவர்கள் போராட்டம் நடாத்துவது அவர்களுடைய உரிமை. அவர்களுடைய கோரிக்கை. ஆனால் நாங்கள் அதனை சட்டரீதியாக பார்க்க வேண்டும்.2018ஆம் ஆண்டு அரசியல் யாப்பு சட்டத்தில், முதற்தடவையாக எல்லை தாண்டி வந்தால் அவர்களுக்கு பிணை வழங்க முடியும் என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை எல்லை தாண்டி வரும்போது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றுள்ளது.இந்த தடவை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் எல்லை தாண்டி வந்தவர்களும், படகின் உரிமையாளர் அல்லது படகோட்டியும் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அது அவர்களுக்கு சுட்டுவிட்டது.ஏனெனில், அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை எல்லை தாண்டி வருகின்றபோது தண்டிக்கப்படுவார்கள் என்ற வகையில் தமது கருத்துக்களை கூறி வருகின்றனர்.என்னை பொறுத்தவரையில் எங்களுடைய நாடு, எங்களுடைய மக்கள், எங்களுடைய கடல் இதுதான் எனது முன்னுரிமை. அதுதான் நியாயம் என்றும் நான் கருதுகிறேன்.இதேவேளை, இலங்கை மீனவர்கள் 3ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் குறித்து தங்களது நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை, நான் அமைச்சரவையில் இருக்கிறேன். நான் இன்னும் இராஜினாமா செய்யாதபடியால் அதில் நேரடியாக கலந்துகொள்ள மாட்டேன். அதற்கிடையில் நான் இராஜினாமா செய்தால் நானும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement