• Nov 28 2024

கனடாவின் வான்கூவார் பகுதியில் இந்திய தேசிய கொடிகளை எரித்து போராட்டம்..!!

Tamil nila / Feb 19th 2024, 6:26 am
image

கனடாவில் இந்திய தேசியக் கொடிகளை எரித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதாவது கனடாவின் வான்கூவார் பகுதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு எதிரில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்திய தேசியக் கொடிகளை எரித்தும், வெட்டி சிதைத்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அதிகளவில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

சீக்கிய ஆண்மீகத் தலைவர்களில் ஒருவரான ஹார்டிப் சிங் நிஜார் என்பவர் சர்ரே பகுதியில் ஆலயமொன்றின் அருகாமையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு நியாயம் வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை இந்திய அரசாங்கமே மேற்கொண்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் போராட்டத்தில் கலிஸ்தான் கொடிகளை ஏந்திய போராட்டக்காரர்கள், இந்திய எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர்.

மேலும் இது அமைதியான போராட்டம் எனவும் வன்முறைகள் எதுவும் கிடையாது எனவும் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவரான மாஜின்டர் சிங் தெரிவித்துள்ளார். 

கனடாவின் வான்கூவார் பகுதியில் இந்திய தேசிய கொடிகளை எரித்து போராட்டம். கனடாவில் இந்திய தேசியக் கொடிகளை எரித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதாவது கனடாவின் வான்கூவார் பகுதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு எதிரில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.இந்திய தேசியக் கொடிகளை எரித்தும், வெட்டி சிதைத்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அதிகளவில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.சீக்கிய ஆண்மீகத் தலைவர்களில் ஒருவரான ஹார்டிப் சிங் நிஜார் என்பவர் சர்ரே பகுதியில் ஆலயமொன்றின் அருகாமையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு நியாயம் வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலை இந்திய அரசாங்கமே மேற்கொண்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் போராட்டத்தில் கலிஸ்தான் கொடிகளை ஏந்திய போராட்டக்காரர்கள், இந்திய எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர்.மேலும் இது அமைதியான போராட்டம் எனவும் வன்முறைகள் எதுவும் கிடையாது எனவும் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவரான மாஜின்டர் சிங் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement