இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் நெடுந்தீவு மீனவர்களின் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் நேற்றையதினம்(25) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவு கடற்பரப்புக்குள் நேற்றையதினம் இரவு இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதனை அவதானித்த நெடுந்தீவு மீனவர்கள், இந்திய மீனவர்கள் மீது கல்லை கொண்டு தாக்கிய போதிலும் அவர்கள் திருப்பி தாக்கியதாக கூறப்படுகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் குறித்த கடற்பகுதியில் காணப்பட்ட நெடுந்தீவு மீனவர்களின் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான வலைகள் இந்திய இழுவைப் படகுகளால் அறுத்தெறியப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக அத்துமீறி இந்திய மீனவர்களின் நடவடிக்கையால் தாங்கள் மீன்பிடி தொழிலை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக நெடுந்தீவு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்திய இழுவைப் படகுகள் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறல்; 20 லட்சம் பெறுமதியான வலைகள் நாசம். இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் நெடுந்தீவு மீனவர்களின் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.இச் சம்பவம் நேற்றையதினம்(25) இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நெடுந்தீவு கடற்பரப்புக்குள் நேற்றையதினம் இரவு இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டது.இதனை அவதானித்த நெடுந்தீவு மீனவர்கள், இந்திய மீனவர்கள் மீது கல்லை கொண்டு தாக்கிய போதிலும் அவர்கள் திருப்பி தாக்கியதாக கூறப்படுகின்றது.இவ்வாறானதொரு நிலையில் குறித்த கடற்பகுதியில் காணப்பட்ட நெடுந்தீவு மீனவர்களின் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான வலைகள் இந்திய இழுவைப் படகுகளால் அறுத்தெறியப்பட்டுள்ளது.இவ்வாறு தொடர்ச்சியாக அத்துமீறி இந்திய மீனவர்களின் நடவடிக்கையால் தாங்கள் மீன்பிடி தொழிலை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக நெடுந்தீவு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.