• Feb 21 2025

இலங்கைக்கு வந்த இந்தோனேசிய கடற்படை கப்பல்

Chithra / Feb 17th 2025, 8:55 am
image

 

இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI BUNG TOMO - 357' (கிரி பங் டோமோ - 357) என்ற போர்க்கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்த போர்க்கப்பல் நேற்று (16) கொழும்பு துறைமுகத்திற்கு சிநேகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்தது.

குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள  ‘KRI BUNG TOMO - 357’ போர்க்கப்பல் 95 மீட்டர் நீளமும் கொண்டது.

இந்த கப்பல், மொத்தம் 111 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக் கெப்டன் (N) DEDI GUNAWAN WIDYATMOKO கடமையாற்றுகின்றார் என கூறப்பட்டுள்ளது.

இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், கொழும்பில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிட திட்டமிடப்பட்டிருந்தது.

இலங்கைக்கு வந்த இந்தோனேசிய கடற்படை கப்பல்  இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI BUNG TOMO - 357' (கிரி பங் டோமோ - 357) என்ற போர்க்கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.இந்த போர்க்கப்பல் நேற்று (16) கொழும்பு துறைமுகத்திற்கு சிநேகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்தது.குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றுள்ளனர்.கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள  ‘KRI BUNG TOMO - 357’ போர்க்கப்பல் 95 மீட்டர் நீளமும் கொண்டது.இந்த கப்பல், மொத்தம் 111 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக் கெப்டன் (N) DEDI GUNAWAN WIDYATMOKO கடமையாற்றுகின்றார் என கூறப்பட்டுள்ளது.இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், கொழும்பில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிட திட்டமிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement