இந்தோனேசிய கடல்சார் விவகாரம் மற்றும் மீன்பிடி அமைச்சினால் இயக்கப்படும் ATR 42-500 ரக விமானம் மகாசாருக்குச் செல்லும் வழியில் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தோனேசிய கடல்சார் விவகாரம் மற்றும் மீன்பிடி அமைச்சினால் இயக்கப்படும் ATR 42-500 ரக விமானம் ஒன்று, நேற்றுமுன்தினம் மகாசர் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.
மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல் 1:17 அளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இந்த விமானம் இழந்தது.
விமானத்தில் 8 ஊழியர்களும் 3 பயணிகளும் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மகாசர் விமான நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லியாங்-லியாங் மலைப்பகுதியில் விமானம் மாயமாகியுள்ளது.
இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவரகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து மாயமான விமானத்தைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் மலைப்பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகி நொருங்கியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விமான உடற்பகுதி, வால், ஜன்னல்கள் மற்றும் பிற இடிபாடுகள் உட்பட சிதறிய குப்பைகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விபத்திற்குள்ளான பகுதியிலிருந்து 200 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு பாறைக்கு அருகில் ஒரு உடலை மீட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தின் "கருப்புப் பெட்டி" மற்றும் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் மீட்கப்பட்டதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.
சுமார் 1,353 மீட்டர் உயரத்தில், செங்குத்தான, அடர்ந்த காடுகள் மற்றும் அடர்ந்த மூடுபனியால் மூடப்பட்ட புலுசராங் மலைப் பள்ளத்தாக்கில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை வெளியேற்றுவதற்கான பெரும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் மூடுபனி மற்றும் காற்று காரணமாக நேற்று இரவு முழுவதும் தேடுதல் நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய விமானப்படை நடவடிக்கைக்கு உதவ கோபாஸ்கட், கராகல் ஹெலிகாப்டர்கள் மற்றும் உளவு விமானங்களை அனுப்பியுள்ளது.
11 பேருடன் மாயமான இந்தோனேசிய விமானம்; மலைப்பகுதியில் நொருங்கி விபத்து- பயணியின் உடலும் மீட்பு இந்தோனேசிய கடல்சார் விவகாரம் மற்றும் மீன்பிடி அமைச்சினால் இயக்கப்படும் ATR 42-500 ரக விமானம் மகாசாருக்குச் செல்லும் வழியில் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தோனேசிய கடல்சார் விவகாரம் மற்றும் மீன்பிடி அமைச்சினால் இயக்கப்படும் ATR 42-500 ரக விமானம் ஒன்று, நேற்றுமுன்தினம் மகாசர் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல் 1:17 அளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இந்த விமானம் இழந்தது.விமானத்தில் 8 ஊழியர்களும் 3 பயணிகளும் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மகாசர் விமான நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லியாங்-லியாங் மலைப்பகுதியில் விமானம் மாயமாகியுள்ளது.இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவரகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து மாயமான விமானத்தைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் மலைப்பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகி நொருங்கியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விமான உடற்பகுதி, வால், ஜன்னல்கள் மற்றும் பிற இடிபாடுகள் உட்பட சிதறிய குப்பைகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். விபத்திற்குள்ளான பகுதியிலிருந்து 200 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு பாறைக்கு அருகில் ஒரு உடலை மீட்டுள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தின் "கருப்புப் பெட்டி" மற்றும் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் மீட்கப்பட்டதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. சுமார் 1,353 மீட்டர் உயரத்தில், செங்குத்தான, அடர்ந்த காடுகள் மற்றும் அடர்ந்த மூடுபனியால் மூடப்பட்ட புலுசராங் மலைப் பள்ளத்தாக்கில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை வெளியேற்றுவதற்கான பெரும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் மூடுபனி மற்றும் காற்று காரணமாக நேற்று இரவு முழுவதும் தேடுதல் நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய விமானப்படை நடவடிக்கைக்கு உதவ கோபாஸ்கட், கராகல் ஹெலிகாப்டர்கள் மற்றும் உளவு விமானங்களை அனுப்பியுள்ளது.