• Nov 24 2024

அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் கணக்கெடுப்பு தொடர்பில் வெளியான தகவல்!

Chithra / Oct 2nd 2024, 7:38 am
image

 

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களாக அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரண்டாம் கட்டத்துக்காக 455,697 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

அவற்றில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக, ஜூலை 31ம் திகதி தகவல் கணக்கெடுப்பு பணியை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் காரணமாக கணக்கெடுப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பணி மேலும் தாமதமாகும் எனவும் மாவட்டச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது தொடர்பில் நலன்புரிப் பலன்கள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்னவிடம் மேற்கொண்ட விசாரணையில், தேர்தல் காரணமாக, அது தொடர்பான கணக்கெடுப்புப் பணிகளை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் கணக்கெடுப்பு தொடர்பில் வெளியான தகவல்  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களாக அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இரண்டாம் கட்டத்துக்காக 455,697 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.இரண்டாம் கட்டமாக, ஜூலை 31ம் திகதி தகவல் கணக்கெடுப்பு பணியை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் காரணமாக கணக்கெடுப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பணி மேலும் தாமதமாகும் எனவும் மாவட்டச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இது தொடர்பில் நலன்புரிப் பலன்கள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்னவிடம் மேற்கொண்ட விசாரணையில், தேர்தல் காரணமாக, அது தொடர்பான கணக்கெடுப்புப் பணிகளை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement