• Sep 19 2024

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் தொடர்பில் வெளியான தகவல்

Chithra / Dec 8th 2022, 8:35 am
image

Advertisement


2022ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாதத்தில் நாட்டின் கையிருப்பு சொத்துக்கள் 5.8 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அந்த மதிப்பு 1804 மில்லியன் அமெரிக்க டொலர் என மத்திய வங்கி குறிப்பிடுகின்றது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்தின் மதிப்பு 1705 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

சீன மக்கள் வங்கியிடமிருந்து ‘ஸ்வாப்’ மூலம் பெறப்பட்ட 1.4 பில்லியன் டொலர் வரையறுக்கப்பட்ட தொகையை உள்ளடக்கியதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணி கையிருப்பு, ஒக்டோபர் மாதத்தில் 1610 மில்லியன் டொலரிலிருந்து நவம்பரில் 1732 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இது 7.6% வளர்ச்சியாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருடத்தின் ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 355 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாத வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 1192 மில்லியன் அமெரிக்க டொலராவும், இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் அதே வருமானம் 1051 மில்லியன் அமெரிக்க டொலராகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 11.9 மில்லியன் அமெரிக்க டொலர் வீழ்ச்சியைக் காட்டுகிறது.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் தொடர்பில் வெளியான தகவல் 2022ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாதத்தில் நாட்டின் கையிருப்பு சொத்துக்கள் 5.8 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.அந்த மதிப்பு 1804 மில்லியன் அமெரிக்க டொலர் என மத்திய வங்கி குறிப்பிடுகின்றது.கடந்த ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்தின் மதிப்பு 1705 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.சீன மக்கள் வங்கியிடமிருந்து ‘ஸ்வாப்’ மூலம் பெறப்பட்ட 1.4 பில்லியன் டொலர் வரையறுக்கப்பட்ட தொகையை உள்ளடக்கியதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணி கையிருப்பு, ஒக்டோபர் மாதத்தில் 1610 மில்லியன் டொலரிலிருந்து நவம்பரில் 1732 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.இது 7.6% வளர்ச்சியாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வருடத்தின் ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 355 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாத வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 1192 மில்லியன் அமெரிக்க டொலராவும், இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் அதே வருமானம் 1051 மில்லியன் அமெரிக்க டொலராகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதன்படி, கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 11.9 மில்லியன் அமெரிக்க டொலர் வீழ்ச்சியைக் காட்டுகிறது.

Advertisement

Advertisement

Advertisement