• May 20 2024

FIFA தொடரை காண செல்வோர் எண்ணிக்கை சரிவு - நஷ்டத்தில் கட்டார்

crownson / Dec 8th 2022, 8:26 am
image

Advertisement

கட்டாரில் இடம்பெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் முதல் 2 வாரங்களில் இடம்பெற்ற ஆட்டங்களை நேரில்காணச் சென்றவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிடக் குறைவா இருந்ததாக ஏற்பாட்டார்களின் அறிக்கை சொல்கிறது.

உலகக் கிண்ணப் போட்டியை நேரடியாகக் காண 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வருகையாளர்களைக் கட்டார் எதிர்பார்த்திருந்தது.

போட்டியின் முதல் 17 நாள்களில் 765,000 பேர் மட்டுமே ஆட்டங்களை நேரே காணச் சென்றதாக ராய்ட்டர்ஸ் சொன்னது.

இந்நிலையில் காலிறுதிப் போட்டியில் 8 அணிகளே எஞ்சியுள்ள வேளையில், நிறையப்பேர் டோஹாவுக்குச் சென்று ஆட்டங்களைக் காணும் சாத்தியம் குறைவு என்று நம்பப்படுகிறது.

இதற்கு முன்னரே போட்டி ஏற்பாட்டாளர்கள் போட்டி தொடங்கிய 4ஆவது நாளான நவம்பர் 24 முதல் நவம்பர் 28 வரை ஆட்டங்களை நேரே காணச் செல்பவர்களின் எண்ணிக்கை உச்சநிலையில் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டது.

மேலும் இந்த தொடருக்காக கட்டார் அரசாங்கம் பல கோடி ரூபாய்களை வாரி இறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FIFA தொடரை காண செல்வோர் எண்ணிக்கை சரிவு - நஷ்டத்தில் கட்டார் கட்டாரில் இடம்பெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் முதல் 2 வாரங்களில் இடம்பெற்ற ஆட்டங்களை நேரில்காணச் சென்றவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருந்ததாக ஏற்பாட்டார்களின் அறிக்கை சொல்கிறது.உலகக் கிண்ணப் போட்டியை நேரடியாகக் காண 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வருகையாளர்களைக் கட்டார் எதிர்பார்த்திருந்தது.போட்டியின் முதல் 17 நாள்களில் 765,000 பேர் மட்டுமே ஆட்டங்களை நேரே காணச் சென்றதாக ராய்ட்டர்ஸ் சொன்னது.இந்நிலையில் காலிறுதிப் போட்டியில் 8 அணிகளே எஞ்சியுள்ள வேளையில், நிறையப்பேர் டோஹாவுக்குச் சென்று ஆட்டங்களைக் காணும் சாத்தியம் குறைவு என்று நம்பப்படுகிறது.இதற்கு முன்னரே போட்டி ஏற்பாட்டாளர்கள் போட்டி தொடங்கிய 4ஆவது நாளான நவம்பர் 24 முதல் நவம்பர் 28 வரை ஆட்டங்களை நேரே காணச் செல்பவர்களின் எண்ணிக்கை உச்சநிலையில் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டது.மேலும் இந்த தொடருக்காக கட்டார் அரசாங்கம் பல கோடி ரூபாய்களை வாரி இறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement