• May 06 2025

தேசபந்துவுக்கு எதிரான விசாரணைக் குழு - உறுப்பினர் நியமனம் அடுத்த வாரம்!

Chithra / Apr 13th 2025, 1:28 pm
image


பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்ட குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, சபாநாயகர் இது தொடர்பாக தலைமை நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

நிலையியற் கட்டளைகளின்படி, பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒப்புக்கொண்ட ஒரு நீதிபதியையும் ஒரு நிபுணரையும் தலைமை நீதிபதி இந்தக் குழுவிற்கு நியமிக்க வேண்டும். 

மேலும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் இந்தக் குழுவின் கட்டாய உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். 

அதன்படி, இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் 151 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

தேசபந்துவுக்கு எதிரான விசாரணைக் குழு - உறுப்பினர் நியமனம் அடுத்த வாரம் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்ட குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, சபாநாயகர் இது தொடர்பாக தலைமை நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நிலையியற் கட்டளைகளின்படி, பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒப்புக்கொண்ட ஒரு நீதிபதியையும் ஒரு நிபுணரையும் தலைமை நீதிபதி இந்தக் குழுவிற்கு நியமிக்க வேண்டும். மேலும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் இந்தக் குழுவின் கட்டாய உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். அதன்படி, இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் 151 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now