கந்தளாய் பேராறு பகுதியில் சுற்றுச்சூழலைச் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த 30இற்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் கந்தளாய் பொலிஸார் இணைந்து நேற்று (05) இந்த விசேட டெங்கு பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அகமட் நசீர் தலைமையில் நடைபெற்ற இந்நடவடிக்கையின்போது, அப்பகுதியிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கோழி இறைச்சிக் கடைகள், மரக்கறிக் கடைகள் மற்றும் பாடசாலை வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான சூழலைக் கொண்டிருந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், சுற்றுச்சூழலைச் சுகாதாரமான முறையில் பராமரிக்கத் தவறிய 30இற்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராகச் சுகாதாரச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அகமட் நசீர் தெரிவித்தார்.
வீடுகள் முதல் வர்த்தக நிலையங்கள் வரை தீவிர சோதனை – 30இற்கும் மேற்பட்டோருக்கு எதிராக பாய்ந்த சட்டம் கந்தளாய் பேராறு பகுதியில் சுற்றுச்சூழலைச் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த 30இற்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் கந்தளாய் பொலிஸார் இணைந்து நேற்று (05) இந்த விசேட டெங்கு பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அகமட் நசீர் தலைமையில் நடைபெற்ற இந்நடவடிக்கையின்போது, அப்பகுதியிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கோழி இறைச்சிக் கடைகள், மரக்கறிக் கடைகள் மற்றும் பாடசாலை வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான சூழலைக் கொண்டிருந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், சுற்றுச்சூழலைச் சுகாதாரமான முறையில் பராமரிக்கத் தவறிய 30இற்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராகச் சுகாதாரச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அகமட் நசீர் தெரிவித்தார்.