• Nov 24 2024

யாழில் தீவிரமடையும் டெங்கு தாக்கம்...!களத்தில் இறங்கிய பொது சுகாதார பரிசோதகர்கள்...!samugammedia

Sharmi / Jan 9th 2024, 12:50 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  கட்டைக்காட்டில் இன்று டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன.

மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கட்டைக்காடு பொது சுகாதார பரிசோதகரின் ஒழுங்கு படுத்தலில் முள்ளியான் கிராம சேவையாளர் கி.சுபகுமார் தலைமையில் ,குறித்த டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை இல்லாதொழித்ததுடன் பலருக்கு சிவப்பு ச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

முள்ளியான் கிராம சேவையாளர் பிரிவில் நேற்று ஒருவருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலையே இன்றைய தினம் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பருத்தித்துறை பிரதேச சபையுடன் இணைந்து பொது  இடங்களில் காணப்படும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



யாழில் தீவிரமடையும் டெங்கு தாக்கம்.களத்தில் இறங்கிய பொது சுகாதார பரிசோதகர்கள்.samugammedia யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  கட்டைக்காட்டில் இன்று டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன.மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கட்டைக்காடு பொது சுகாதார பரிசோதகரின் ஒழுங்கு படுத்தலில் முள்ளியான் கிராம சேவையாளர் கி.சுபகுமார் தலைமையில் ,குறித்த டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை இல்லாதொழித்ததுடன் பலருக்கு சிவப்பு எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.முள்ளியான் கிராம சேவையாளர் பிரிவில் நேற்று ஒருவருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலையே இன்றைய தினம் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மேலும், பருத்தித்துறை பிரதேச சபையுடன் இணைந்து பொது  இடங்களில் காணப்படும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement