• Apr 28 2025

உள்ளக அலுவல்கள் அலகு - மாவட்ட செயலகத்தில் திறந்து வைப்பு!

Chithra / Apr 28th 2025, 4:23 pm
image


ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவிற்கமைய,  இலஞ்சம் மற்றும் ஊழலினை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டமான இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயற்பாடு திட்டத்தினை மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளைமுறையிடுவதற்கு  "உள்ளக அலுவல்கள்  அலகு" எனும் பிரிவானது இன்றைய தினம் காலை 09.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது. 

இவ் அலகினை திறந்துவைத்து உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சனாதிபதி செயலகத்தின்  அறிவுறுத்தலுக்கு அமைவாக  மாவட்ட மட்டத்தில்உள்ளக அலுவல்கள் பிரிவு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழல்  செயற்பாடுகளை தடுப்பதாகவும் அதேவேளை அலுவலக செயற்பாடுகள் வெளிப்படுத்தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமையவும்,  அதேவேளை பொதுமக்கள் மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாக முழுமையான விபரங்களை அறிந்து கொள்வதற்கும்,  குறிப்பாக அலுவலக நடைமுறைகள் தொடர்பாகவும் அல்லது ஏதாவது விடயங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படுகின்ற போது இப் பிரிவை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதற்கு  ஸ்தாபிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்  அதன் அடிப்படையில் நம்பகத்தன்மையான அலுவலகமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பின்  இந்த அலுவலகத்தில் முறைப்பாடுகளை  மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். 

மேலும் வெளிப்படுத்தன்மை மற்றும் ஊழலற்ற இலஞ்சமற்ற பிரதேசத்தை உருவாக்குவதற்கு  திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிர்வாகத்தின் நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதுடன், பொதுமக்கள் அவர்களின் பிரச்சினைகளை அணுகக்கூடியதாகவும் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்களுக்கான தகவல்களை வெளிக்கொணர வேண்டிய கடப்பாட்டு ஒவ்வொருவருக்கும் உண்டு  என்றும் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

முன்பு  அரச அலுவலகங்களில்  வெளிப்படுத்தன்மை  குறைவாக  காணப்பட்டதாகவும்  தகவல் அறியும் உரிமை சட்டம் வந்ததன் பின்னர் அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன்  வெளிக்கொணர  வேண்டிய தேவை உள்ளதாகவும் 12 ஆண்டுகளுக்கு ஆவணங்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், அரச உத்தியோதர்களாகிய நாம் இதற்கு  மேலும் வலுச் சேர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதற்கு மேலதிகமாக  இலஞ்சம் மற்றும் ஊழல் சரத்துக்களை ஆராயும் ஆணை குழுவிற்கு அதன் விடயங்கள் அனுப்பப்படும் எனவும் தெரிவித்துடன், நிர்வாக நடைமுறைகளை மேலும் வலு சேர்ப்பதற்கு  வினைத்திறனாக செயல்பட வேண்டும் எனவும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். 

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பிரிவின் இணைப்பாளராக திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவ் அலுவலகத்தில் ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பாக கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்து மேலதிக நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யப்படும்.

உள்ளக அலுவல்கள் பிரிவின்  நோக்கங்கள்  தொடர்பாக திட்டமிடல் பணிப்பாளர் அவர்களால் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது.

1.நிறுவனத்தில் ஊழலைத் தடுத்தலும் ஒருமைப்பாட்டு கலாச்சாரத்தை வளர்த்தலும் 

2.நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை  உறுதி செய்தல், மற்றும் நிறுவனத்தின் நடைமுறைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அணுகுவதை உறுதி செய்தல். 

3.நிறுவனத்திற்குள்  நெறிமுறை ஆளுகையை மேம்படுத்துதல். 

4.தவறான நடத்தைகளை புகாரளிப்பதற்கும் விசாரணையாளர்களை பாதுகாப்பதற்கும் மற்றும் இரகசியத் தன்மையை பேணுவதற்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் அணுகக் கூடிய அமைப்பை உருவாக்குதல் 

5 சட்டத்தை  நடைமுறைப்படுத்தும் முகவர் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆதரவளித்தல். 

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


உள்ளக அலுவல்கள் அலகு - மாவட்ட செயலகத்தில் திறந்து வைப்பு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவிற்கமைய,  இலஞ்சம் மற்றும் ஊழலினை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டமான இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயற்பாடு திட்டத்தினை மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளைமுறையிடுவதற்கு  "உள்ளக அலுவல்கள்  அலகு" எனும் பிரிவானது இன்றைய தினம் காலை 09.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது. இவ் அலகினை திறந்துவைத்து உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சனாதிபதி செயலகத்தின்  அறிவுறுத்தலுக்கு அமைவாக  மாவட்ட மட்டத்தில்உள்ளக அலுவல்கள் பிரிவு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழல்  செயற்பாடுகளை தடுப்பதாகவும் அதேவேளை அலுவலக செயற்பாடுகள் வெளிப்படுத்தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமையவும்,  அதேவேளை பொதுமக்கள் மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாக முழுமையான விபரங்களை அறிந்து கொள்வதற்கும்,  குறிப்பாக அலுவலக நடைமுறைகள் தொடர்பாகவும் அல்லது ஏதாவது விடயங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படுகின்ற போது இப் பிரிவை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதற்கு  ஸ்தாபிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும்  அதன் அடிப்படையில் நம்பகத்தன்மையான அலுவலகமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பின்  இந்த அலுவலகத்தில் முறைப்பாடுகளை  மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும் வெளிப்படுத்தன்மை மற்றும் ஊழலற்ற இலஞ்சமற்ற பிரதேசத்தை உருவாக்குவதற்கு  திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிர்வாகத்தின் நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதுடன், பொதுமக்கள் அவர்களின் பிரச்சினைகளை அணுகக்கூடியதாகவும் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்களுக்கான தகவல்களை வெளிக்கொணர வேண்டிய கடப்பாட்டு ஒவ்வொருவருக்கும் உண்டு  என்றும் தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், முன்பு  அரச அலுவலகங்களில்  வெளிப்படுத்தன்மை  குறைவாக  காணப்பட்டதாகவும்  தகவல் அறியும் உரிமை சட்டம் வந்ததன் பின்னர் அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன்  வெளிக்கொணர  வேண்டிய தேவை உள்ளதாகவும் 12 ஆண்டுகளுக்கு ஆவணங்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரச உத்தியோதர்களாகிய நாம் இதற்கு  மேலும் வலுச் சேர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதற்கு மேலதிகமாக  இலஞ்சம் மற்றும் ஊழல் சரத்துக்களை ஆராயும் ஆணை குழுவிற்கு அதன் விடயங்கள் அனுப்பப்படும் எனவும் தெரிவித்துடன், நிர்வாக நடைமுறைகளை மேலும் வலு சேர்ப்பதற்கு  வினைத்திறனாக செயல்பட வேண்டும் எனவும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பிரிவின் இணைப்பாளராக திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவ் அலுவலகத்தில் ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பாக கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்து மேலதிக நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யப்படும்.உள்ளக அலுவல்கள் பிரிவின்  நோக்கங்கள்  தொடர்பாக திட்டமிடல் பணிப்பாளர் அவர்களால் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது.1.நிறுவனத்தில் ஊழலைத் தடுத்தலும் ஒருமைப்பாட்டு கலாச்சாரத்தை வளர்த்தலும் 2.நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை  உறுதி செய்தல், மற்றும் நிறுவனத்தின் நடைமுறைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அணுகுவதை உறுதி செய்தல். 3.நிறுவனத்திற்குள்  நெறிமுறை ஆளுகையை மேம்படுத்துதல். 4.தவறான நடத்தைகளை புகாரளிப்பதற்கும் விசாரணையாளர்களை பாதுகாப்பதற்கும் மற்றும் இரகசியத் தன்மையை பேணுவதற்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் அணுகக் கூடிய அமைப்பை உருவாக்குதல் 5 சட்டத்தை  நடைமுறைப்படுத்தும் முகவர் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆதரவளித்தல். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement