• Oct 04 2024

இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..! samugammedia

Tamil nila / Jan 26th 2024, 9:05 pm
image

Advertisement

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் இன்று (26) வழங்கிய தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

பலஸ்தீனர்கள் இனப் பேரழிவு நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது.

இனப் பேரழிவுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினர் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இஸ்ரேல் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கி விட்டதுடன், 1.9 மில்லியன் மக்களை தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றிய நிலையில், குறைந்தது 25,900 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு. samugammedia காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் இன்று (26) வழங்கிய தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.பலஸ்தீனர்கள் இனப் பேரழிவு நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது.இனப் பேரழிவுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினர் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இஸ்ரேல் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கி விட்டதுடன், 1.9 மில்லியன் மக்களை தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றிய நிலையில், குறைந்தது 25,900 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement