• May 17 2024

அதிகாரிகளின் அசமந்த போக்கு! - கனமழை ஓய்ந்து ஒரு மாதம் கடந்தும் வீடுகளுக்கு திரும்பமுடியாத அவல நிலையில் தேராவில் மக்கள்

Chithra / Jan 26th 2024, 8:47 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில்  பகுதிகளில் வசிக்கும்  மக்கள் கனமழை ஓய்ந்து ஒரு மாதம்  கடந்தும்   இன்றும் வீடுகளுக்கு திரும்பமுடியாத அவல நிலையில் சிக்கியுள்ளனர்.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் குளத்தின் மேலதிக நீர் வெளியேறுவதற்கான வழிகள் மறிக்கப்பட்ததால் குளத்தின் நீர்  நிரம்பியுள்ளது.

புதிய வீதி அமைக்கும்போது மேலதிக நீர் வீதியை குறுக்கறுத்து செல்வதற்கான பாலம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் அமைக்காததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் சிறியவர்கள், முதியவர்கள் உள்ளடங்கலாக பாடசாலையில் வாழ்ந்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  தேராவில் குளக்கரையினை அண்டிய 10ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வீதிகளில் குளத்து நீர் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

தேராவில் குளம் விவசாய செய்கைக்கு உட்படுத்தப்படாத, குறிப்பாக வயல் நிலங்கள் அற்ற மூங்கிலாறு, தேராவில் கிராமத்திற்கு பொதுவாக காணப்படும் ஒரு சிறிய குளமாகும்


மக்கள் தமது கிணறுகளில் போதிய  நீரினை வைத்திருப்பதற்கும், மீன்பிடி நடவடிக்கைக்காகவும்   நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்காகவும், கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்யும்  வகையிலும்  பாதுகாத்து சிறிய குளமாக பயன்படுத்துகின்றனர்.

குறித்த குளத்தின் மேலதிக நீர் வெளியேறக்கூடிய வகையில் குளக்கட்டில் பாலம் அமைக்கப்பட்டு மேலதிக நீர் அருகிலுள்ள தேக்கங்காட்டின் ஊடாக வெளியேறி பிரமந்தனாறு  குளத்துக்கு   செல்வது வழமையாக இருந்தது.

இவ்வாறான  நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு மழை காலத்தில் குறித்த குளக்கட்டில் வாகனம் ஒன்று பழுதடைந்து வீதி தடைப்பட்டபோது  அருகில் இருந்த தேக்கங்காட்டின் ஊடாக தேக்க மரக்கன்றுகள் அகற்றப்பட்டு தற்காலிகமாக வீதி ஒன்று  உருவாக்கப்பட்டது.


2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த தேக்கங்காட்டு பகுதியில் இலங்கை இராணுவத்தின் 681 வது படைப்பிரிவினர் நிலைகொண்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதோடு,

ஏற்கனவே இருந்த பரந்தன் முல்லைத்தீவு வீதியைபுணரமைக்காது, 2008 ம் ஆண்டு தேக்கங்காட்டின் ஊடாக தேக்க மரக்கன்றுகள் அகற்றப்பட்டு தற்காலிகமாக  உருவாக்கப்பட்ட வீதியே நிரந்தர பரந்தன், முல்லைத்தீவு பிரதான வீதியாக காபற் இட்டு செப்பனிடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை இந்த புணரமைப்பு பணியின் போது, வீதி நிலமட்டத்திலிருந்து உயர்த்தப்பட்டதோடு, தேராவில் குளத்தின்  மேலதிக நீர் வெளியேறுவதற்கான பாலம் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் குறித்த வீதி குறித்த குளத்தின் குளக்கட்டாக மாறியுள்ளது 


 இந்நிலையில் நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த கன  மழையினால் ஏற்பட்ட  வெள்ளத்தினால் குளத்தின் மேலதிக நீர் வெளியேற வழியில்லாததால் குளம்   நிரம்பி புதிதாக அமைக்கப்பட்ட வீதியின் உயரம் வரை நீர் தேங்கி உள்ளது.

இதனால் குளத்தை  அண்மித்த மக்களின் காணிகள், வீடுகள், வீதிகளுக்குள் குளத்து நீர் சென்றுள்ளதால் மக்கள் இன்று  தங்கள் அன்றாட வாழ்வினை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.


தேராவில் கிராமத்திற்கு செல்லும் முதன்மை வீதி மற்றும் மூங்கிலாறு கிராமத்திற்குள் செல்லும் சிறு வீதிகள் இரண்டு, கோவில்கள் இரண்டு  நீரில் மூழ்கியுள்ளன.


பாரிய மழைவெள்ளம் ஏற்பட்டு இன்று ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் இவ்வாறான அவல வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

குளத்தினை அண்மித்த கிழக்கு, தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் குளத்து நீர் புகுந்துள்ளதால் வீடுகளுக்குள் இருக்கமுடியாத நிலையில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுவதுடன்,

மலசகூடங்கள், கிணறுகள் அனைத்தும் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன. இதனால் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதில் கூட சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.


இவ்வாறான பின்னணியில் ஊடகங்களில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து கடந்த 10.01.2024 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர், வனவள திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் வருகைதந்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.


மிக விரைவாக இந்த விடயத்துக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றனர். இருப்பினும் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

நீரை விரைவாக அகற்றி தமது போக்குவரத்து பாதைகளை பயன்படுத்த ஆவண செய்யுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அதிகாரிகளின் அசமந்த போக்கு - கனமழை ஓய்ந்து ஒரு மாதம் கடந்தும் வீடுகளுக்கு திரும்பமுடியாத அவல நிலையில் தேராவில் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில்  பகுதிகளில் வசிக்கும்  மக்கள் கனமழை ஓய்ந்து ஒரு மாதம்  கடந்தும்   இன்றும் வீடுகளுக்கு திரும்பமுடியாத அவல நிலையில் சிக்கியுள்ளனர்.குறித்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் குளத்தின் மேலதிக நீர் வெளியேறுவதற்கான வழிகள் மறிக்கப்பட்ததால் குளத்தின் நீர்  நிரம்பியுள்ளது.புதிய வீதி அமைக்கும்போது மேலதிக நீர் வீதியை குறுக்கறுத்து செல்வதற்கான பாலம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் அமைக்காததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் சிறியவர்கள், முதியவர்கள் உள்ளடங்கலாக பாடசாலையில் வாழ்ந்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  தேராவில் குளக்கரையினை அண்டிய 10ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.வீதிகளில் குளத்து நீர் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள்.தேராவில் குளம் விவசாய செய்கைக்கு உட்படுத்தப்படாத, குறிப்பாக வயல் நிலங்கள் அற்ற மூங்கிலாறு, தேராவில் கிராமத்திற்கு பொதுவாக காணப்படும் ஒரு சிறிய குளமாகும்மக்கள் தமது கிணறுகளில் போதிய  நீரினை வைத்திருப்பதற்கும், மீன்பிடி நடவடிக்கைக்காகவும்   நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்காகவும், கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்யும்  வகையிலும்  பாதுகாத்து சிறிய குளமாக பயன்படுத்துகின்றனர்.குறித்த குளத்தின் மேலதிக நீர் வெளியேறக்கூடிய வகையில் குளக்கட்டில் பாலம் அமைக்கப்பட்டு மேலதிக நீர் அருகிலுள்ள தேக்கங்காட்டின் ஊடாக வெளியேறி பிரமந்தனாறு  குளத்துக்கு   செல்வது வழமையாக இருந்தது.இவ்வாறான  நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு மழை காலத்தில் குறித்த குளக்கட்டில் வாகனம் ஒன்று பழுதடைந்து வீதி தடைப்பட்டபோது  அருகில் இருந்த தேக்கங்காட்டின் ஊடாக தேக்க மரக்கன்றுகள் அகற்றப்பட்டு தற்காலிகமாக வீதி ஒன்று  உருவாக்கப்பட்டது.2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த தேக்கங்காட்டு பகுதியில் இலங்கை இராணுவத்தின் 681 வது படைப்பிரிவினர் நிலைகொண்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதோடு,ஏற்கனவே இருந்த பரந்தன் முல்லைத்தீவு வீதியைபுணரமைக்காது, 2008 ம் ஆண்டு தேக்கங்காட்டின் ஊடாக தேக்க மரக்கன்றுகள் அகற்றப்பட்டு தற்காலிகமாக  உருவாக்கப்பட்ட வீதியே நிரந்தர பரந்தன், முல்லைத்தீவு பிரதான வீதியாக காபற் இட்டு செப்பனிடப்பட்டுள்ளது.வீதி அபிவிருத்தி அதிகாரசபை இந்த புணரமைப்பு பணியின் போது, வீதி நிலமட்டத்திலிருந்து உயர்த்தப்பட்டதோடு, தேராவில் குளத்தின்  மேலதிக நீர் வெளியேறுவதற்கான பாலம் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் குறித்த வீதி குறித்த குளத்தின் குளக்கட்டாக மாறியுள்ளது  இந்நிலையில் நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த கன  மழையினால் ஏற்பட்ட  வெள்ளத்தினால் குளத்தின் மேலதிக நீர் வெளியேற வழியில்லாததால் குளம்   நிரம்பி புதிதாக அமைக்கப்பட்ட வீதியின் உயரம் வரை நீர் தேங்கி உள்ளது.இதனால் குளத்தை  அண்மித்த மக்களின் காணிகள், வீடுகள், வீதிகளுக்குள் குளத்து நீர் சென்றுள்ளதால் மக்கள் இன்று  தங்கள் அன்றாட வாழ்வினை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.தேராவில் கிராமத்திற்கு செல்லும் முதன்மை வீதி மற்றும் மூங்கிலாறு கிராமத்திற்குள் செல்லும் சிறு வீதிகள் இரண்டு, கோவில்கள் இரண்டு  நீரில் மூழ்கியுள்ளன.பாரிய மழைவெள்ளம் ஏற்பட்டு இன்று ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் இவ்வாறான அவல வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.குளத்தினை அண்மித்த கிழக்கு, தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் குளத்து நீர் புகுந்துள்ளதால் வீடுகளுக்குள் இருக்கமுடியாத நிலையில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுவதுடன்,மலசகூடங்கள், கிணறுகள் அனைத்தும் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன. இதனால் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதில் கூட சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.இவ்வாறான பின்னணியில் ஊடகங்களில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து கடந்த 10.01.2024 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர், வனவள திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் வருகைதந்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.மிக விரைவாக இந்த விடயத்துக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றனர். இருப்பினும் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.நீரை விரைவாக அகற்றி தமது போக்குவரத்து பாதைகளை பயன்படுத்த ஆவண செய்யுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement