• Nov 28 2024

திருமலையில் இடம்பெற்ற சர்வதேச பழங்குடியினர் தின நிகழ்வு..!

Sharmi / Aug 6th 2024, 8:50 pm
image

திருகோணமலை மாவட்ட குவேனி பழங்குடி அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீணாக்கேணி - மலைமுந்தல் கிராமத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் கரையோர பழங்குடிகளுக்கான தினம் இன்று (06) அனுஷ்டிக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வில், பழங்குடி மக்கள் தங்களின் வாழ்க்கை முறையோடு ஒட்டியதாக மேள தாளங்களோடு பாடல் பாடி அதிதிகளை அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது பழங்குடி பூஜை,பாடலும் இடம்பெற்றிருந்து.அத்தோடு பழங்குடியினரின் முக்கிய உணவான மரவள்ளிக் கிழங்கு இன்றைய நிகழ்வில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அத்தோடு பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமது கோரிக்கை உள்ளிட்டவைகளை திருகோணமலை,மட்டக்களப்பு மாவட்ட பழங்குடியின தலைவர்கள் இணைந்து வருகை தந்த அதிகாரிகளிடம் கையளித்திருந்தனர்.

குறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பழங்குடியின தலைவர் நல்ல தம்பி வேலாயுதம், திருகோணமலை மாவட்ட பழங்குடியின தலைவர் நடராசா கணகரட்ணம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.எம்.இஸ்ஸடீன், மூதூர் உதவி பிரதேச செயலாளர் றொசானா ரஸீம் ,கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் மதன் ,மாவட்ட கலாசார உத்தியோகத்தர், மூதூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பழங்குடியின பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருமலையில் இடம்பெற்ற சர்வதேச பழங்குடியினர் தின நிகழ்வு. திருகோணமலை மாவட்ட குவேனி பழங்குடி அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீணாக்கேணி - மலைமுந்தல் கிராமத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் கரையோர பழங்குடிகளுக்கான தினம் இன்று (06) அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில், பழங்குடி மக்கள் தங்களின் வாழ்க்கை முறையோடு ஒட்டியதாக மேள தாளங்களோடு பாடல் பாடி அதிதிகளை அழைத்து வரப்பட்டனர். இதன்போது பழங்குடி பூஜை,பாடலும் இடம்பெற்றிருந்து.அத்தோடு பழங்குடியினரின் முக்கிய உணவான மரவள்ளிக் கிழங்கு இன்றைய நிகழ்வில் பகிர்ந்தளிக்கப்பட்டது.அத்தோடு பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமது கோரிக்கை உள்ளிட்டவைகளை திருகோணமலை,மட்டக்களப்பு மாவட்ட பழங்குடியின தலைவர்கள் இணைந்து வருகை தந்த அதிகாரிகளிடம் கையளித்திருந்தனர்.குறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பழங்குடியின தலைவர் நல்ல தம்பி வேலாயுதம், திருகோணமலை மாவட்ட பழங்குடியின தலைவர் நடராசா கணகரட்ணம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.எம்.இஸ்ஸடீன், மூதூர் உதவி பிரதேச செயலாளர் றொசானா ரஸீம் ,கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் மதன் ,மாவட்ட கலாசார உத்தியோகத்தர், மூதூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பழங்குடியின பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement