சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று நடைபெற்றுவருகின்றன.
அதன்படி கிழக்கு மாகாண சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் சிரேஸ் விரிவுரையாளர் றூபிவலன்ரினா பிரான்சிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது பல்வேறு கஸ்டங்களுக்கும் மத்தியில் சாதணை படைத்த ஆறு பெண்கள் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கஸ்ட நிலையிலும் முன்னேற்றப்பாதையில் சென்ற பெண்களின் அனுபவ பகிர்வும் நடைபெற்றதுடன் மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் அவர்களினால் சரியாக பயன்படுத்தபடுகின்றது? பயன்படுத்தப்படவில்லை என்னும் தலைப்பில் விசேட பட்டிமன்றமும் நடாத்தப்பட்டது.
இதேவேளை மகளீர் விவகார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, கிண்ணியா பிரதேச செயலகத்தால் ஒரு வார காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தச மகளீர் தினத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது
கிண்ணியா பிரதேச மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலைமையின் கீழ், பிரதேச செயலக கேட்பார் கூடத்தில், இந்த நிகழ்வுகள் இடம் பெற்றன.
இதன்போது, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான 2025 ஆம் ஆண்டின் சிறப்பு பெண்மணிகளாக கிராம சேவகர் பிரிவு ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 17 பேர் சான்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், கிண்ணியா பிரதேச செயலகத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் ஊழியர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில், சட்டத்தரணி திருமதி பாத்திமா முனாஸிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, சட்டமும் பெண்களும் என்ற தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார்.
நாடளாவிய ரீதியில் இன்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று நடைபெற்றுவருகின்றன.அதன்படி கிழக்கு மாகாண சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் சிரேஸ் விரிவுரையாளர் றூபிவலன்ரினா பிரான்சிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இதன்போது பல்வேறு கஸ்டங்களுக்கும் மத்தியில் சாதணை படைத்த ஆறு பெண்கள் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன் கஸ்ட நிலையிலும் முன்னேற்றப்பாதையில் சென்ற பெண்களின் அனுபவ பகிர்வும் நடைபெற்றதுடன் மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் அவர்களினால் சரியாக பயன்படுத்தபடுகின்றது பயன்படுத்தப்படவில்லை என்னும் தலைப்பில் விசேட பட்டிமன்றமும் நடாத்தப்பட்டது. இதேவேளை மகளீர் விவகார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, கிண்ணியா பிரதேச செயலகத்தால் ஒரு வார காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தச மகளீர் தினத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றதுகிண்ணியா பிரதேச மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலைமையின் கீழ், பிரதேச செயலக கேட்பார் கூடத்தில், இந்த நிகழ்வுகள் இடம் பெற்றன.இதன்போது, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான 2025 ஆம் ஆண்டின் சிறப்பு பெண்மணிகளாக கிராம சேவகர் பிரிவு ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 17 பேர் சான்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மேலும், கிண்ணியா பிரதேச செயலகத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் ஊழியர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.இந்த நிகழ்வில், சட்டத்தரணி திருமதி பாத்திமா முனாஸிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, சட்டமும் பெண்களும் என்ற தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார்.