• Jun 19 2025

இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

shanuja / Jun 19th 2025, 2:14 pm
image

இஸ்ரேலின் பிரபல மருத்துவமனை ஒன்றின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 


ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் கடந்த வெள்ளக்கிழமை முதல் இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இதில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி நிலையங்கள், இராணுவ நிலைகள் என்பன தாக்குதலுக்குள்ளாகின.


அத்துடன் ஈரானின் படைத்தளபதி உட்பட பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர் என்று ஈரான் சுகாதார  அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது. 


அதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனை இன்று ஏவுகணையால் நேரடியாகத் தாக்கப்பட்டுள்ளது. 


குறித்த மருத்துவமனையில் முஸ்லீம்கள்,யூதர்கள், கிறிஸ்தவர்கள், அரபியர்கள் உள்ளிட்ட பலர் சிகிச்சைபெற்று வரும் நிலையில் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் இஸ்ரேலின் பிரபல மருத்துவமனை ஒன்றின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் கடந்த வெள்ளக்கிழமை முதல் இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இதில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி நிலையங்கள், இராணுவ நிலைகள் என்பன தாக்குதலுக்குள்ளாகின.அத்துடன் ஈரானின் படைத்தளபதி உட்பட பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர் என்று ஈரான் சுகாதார  அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது. அதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனை இன்று ஏவுகணையால் நேரடியாகத் தாக்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவமனையில் முஸ்லீம்கள்,யூதர்கள், கிறிஸ்தவர்கள், அரபியர்கள் உள்ளிட்ட பலர் சிகிச்சைபெற்று வரும் நிலையில் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement