• Mar 11 2026

கடற்படையினரின் சடலங்களை மீளப்பெற ஈரான் நடவடிக்கை

Chithra / Mar 10th 2026, 8:44 pm
image


இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 'ஐரிஸ் டெனா'  கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங்களை விரைவில் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் 'பார்ஸ்'  செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

உயிரிழந்த 104 கடற்படையினரில் 84 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த சடலங்கள் விரைவில் ஈரானுக்கு கொண்டு வரப்படும் என்றும் இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் வெளிவிவகார அமைச்சின் முயற்சி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த சடலங்களை மீளப்பெறும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உயிரிழந்த ஈரான் கடற்படையினரின் சடலங்களை ஈரானிடம் ஒப்படைக்க வேண்டாம் என வொஷிங்டன், இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடற்படையினரின் சடலங்களை மீளப்பெற ஈரான் நடவடிக்கை இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 'ஐரிஸ் டெனா'  கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங்களை விரைவில் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.ஈரானின் 'பார்ஸ்'  செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உயிரிழந்த 104 கடற்படையினரில் 84 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த சடலங்கள் விரைவில் ஈரானுக்கு கொண்டு வரப்படும் என்றும் இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.ஈரான் வெளிவிவகார அமைச்சின் முயற்சி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த சடலங்களை மீளப்பெறும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், உயிரிழந்த ஈரான் கடற்படையினரின் சடலங்களை ஈரானிடம் ஒப்படைக்க வேண்டாம் என வொஷிங்டன், இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement