• Jun 12 2026

அம்பாறையை தாக்கிய கடும் மழை, சூறாவளிக் காற்று; தாழ்நிலப் பகுதிகளுக்கு அபாய மணி

Chithra / Jun 11th 2026, 8:13 pm
image


அம்பாறை மாவட்டத்தில் நீண்டதொடர்  கோடை வெப்பத்தின் பின்னர் திடீர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் சுழல்  காற்று, மின்னல் வெட்டு, கடல் கொந்தளிப்பு என்பனவும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


மேலும் இன்று(11) மாலை  பல்வேறு இடங்களில்  மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சிறு சேதங்களும் ஏற்பட்டுள்ளன.


குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை, மல்வத்தை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில்  மூழ்கிக் காணப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


குறித்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் கடும் காற்றால் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டதுடன் மின்னல் வெட்டினால் அச்ச நிலைமை ஏற்பட்டிருந்து.

 

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் திடீர் கனமழையால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், வீதிகள் பலவும் நீரில் மூழ்கி வருகின்றன.


தொடர்ந்து மழை பெய்து வருவதால்  தாழ் நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளது.எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு 

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று அவசர 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.


இந்த விசேட காலநிலைப் பாதிப்பு குறித்த அறிவித்தலானது, நாளை காலை 10.30 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் உத்தியோகபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளது.


காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள ஆழ்கடல் மற்றும் கரையோரக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் (60 - 70 km/h) வரை மிக உக்கிரமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


எனவே, மறுஅறிவித்தல் வரும் வரை காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களும், கடல்சார் ஊழியர்களும், கடற்படையினரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தற்காலிகமாகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.


அம்பாறையை தாக்கிய கடும் மழை, சூறாவளிக் காற்று; தாழ்நிலப் பகுதிகளுக்கு அபாய மணி அம்பாறை மாவட்டத்தில் நீண்டதொடர்  கோடை வெப்பத்தின் பின்னர் திடீர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் சுழல்  காற்று, மின்னல் வெட்டு, கடல் கொந்தளிப்பு என்பனவும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.மேலும் இன்று(11) மாலை  பல்வேறு இடங்களில்  மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சிறு சேதங்களும் ஏற்பட்டுள்ளன.குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை, மல்வத்தை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில்  மூழ்கிக் காணப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.குறித்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் கடும் காற்றால் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டதுடன் மின்னல் வெட்டினால் அச்ச நிலைமை ஏற்பட்டிருந்து. அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் திடீர் கனமழையால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், வீதிகள் பலவும் நீரில் மூழ்கி வருகின்றன.தொடர்ந்து மழை பெய்து வருவதால்  தாழ் நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளது.எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று அவசர 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.இந்த விசேட காலநிலைப் பாதிப்பு குறித்த அறிவித்தலானது, நாளை காலை 10.30 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் உத்தியோகபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளது.காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள ஆழ்கடல் மற்றும் கரையோரக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் (60 - 70 km/h) வரை மிக உக்கிரமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.எனவே, மறுஅறிவித்தல் வரும் வரை காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களும், கடல்சார் ஊழியர்களும், கடற்படையினரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தற்காலிகமாகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement