• Mar 04 2026

போரில் ஈடுபடாத நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது பொறுப்பற்ற செயலாகும்; வளைகுடா நாடுகள் கண்டனம்!

Ziya / Mar 2nd 2026, 5:11 pm
image


மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையில் ஈரான் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் ஒரு "ஆபத்தான பதற்றநிலை" என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் எச்சரித்துள்ளன.


குவைத் வெளிவிவகார அமைச்சு இன்று மாலை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், 


அமெரிக்காவுடன் இணைந்து குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.


அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் போரில் ஈடுபடாத நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது பொறுப்பற்ற செயலாகும் என இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களுக்கு எதிராக, "தமது நாடுகளைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை" தமக்கு உண்டு என இந்நாடுகள் உறுதிபடத் தெரிவித்துள்ளன.


ஈரானின் தாக்குதல்கள் இதுவரை பஹ்ரைன், ஈராக் (ஈராக் குர்திஸ்தான் பகுதி உட்பட), ஜோர்தான், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.


போரில் ஈடுபடாத நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது பொறுப்பற்ற செயலாகும்; வளைகுடா நாடுகள் கண்டனம் மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையில் ஈரான் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் ஒரு "ஆபத்தான பதற்றநிலை" என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் எச்சரித்துள்ளன.குவைத் வெளிவிவகார அமைச்சு இன்று மாலை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அமெரிக்காவுடன் இணைந்து குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் போரில் ஈடுபடாத நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது பொறுப்பற்ற செயலாகும் என இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களுக்கு எதிராக, "தமது நாடுகளைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை" தமக்கு உண்டு என இந்நாடுகள் உறுதிபடத் தெரிவித்துள்ளன.ஈரானின் தாக்குதல்கள் இதுவரை பஹ்ரைன், ஈராக் (ஈராக் குர்திஸ்தான் பகுதி உட்பட), ஜோர்தான், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

Advertisement

Advertisement

Advertisement