• Nov 25 2024

டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் தொடர்பில் ஈரான் வெளியிட்ட கருத்து..!

Sharmi / Jul 18th 2024, 11:48 am
image

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய சதித்திட்டத்தினை  தாம் மேற்கொள்ளவில்லை என ஈரான்  வெளியுறவுத்துறை அமைச்சா் நாஸா் கனானி  தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

அண்மையில் அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய நடைபெற்ற முயற்சியில் எங்கள் நாட்டுக்குத் தொடா்பிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.அதுபோல், தளபதி காசிம் சுலைமானி படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக டிரம்ப்பைக் கொல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதும் தவறான தகவல்.

சுலைமானி படுகொலையைப் பொறுத்தவரை, அதற்கு நேரடி தொடா்புடைய டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துதான் பரிசீலித்துவருகிறோம் என்றாா் அவா்.

ஈரான் துணை ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவு தளபதியாக இருந்தவா் காசிம் சுலைமானி.

அந்த நாட்டில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக அவா் இராக் சென்றிருந்தபோது, அவரைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா கடந்த 2020 ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தியது.

இதில் சுலைமானி உள்பட 8 போ் உயிரிழந்தனா்.சுலைமானியை படுகொலை செய்வதற்கான உத்தரவை டொனால்ட் டிரம்ப் நேரடியாகப் பிறப்பித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின.

இந்தச் சூழலில், வரும் நவம்பா் 5-ஆம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் ஜோ பைடனை எதிா்த்து, டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறாா்.

அவா் தோ்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பட்லா் நகரில் டிரம்ப் சனிக்கிழமை தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது  டிரம்ப் மீது முறை துப்பாக்கிசூடு இடம்பெற்றது.

இதில் டிரம்ப்பின் காதை துப்பாக்கி தோட்டா உரசிச் சென்றதில், அவரின் வலது காதில் காயம் ஏற்பட்டது. இது தவிர, துப்பாக்கி குண்டு பாய்ந்து கூட்டத்தில் பங்கேற்ற ஒருவா் உயிரிழந்தாா்; இருவா் படுகாயமடைந்தனா்.

டிரம்ப்பின் காதில் காயம் ஏற்படுத்திய துப்பாக்கிக் குண்டு பாய்ந்து வந்த பாதையின் குறுக்கே அவரிந் தலை 2 விநாடிகளாக நிலைத்திருந்தது.

இருந்தாலும், கடைசி நேரத்தில் அவா் எதையோ படிப்பதற்காக தலையை சற்றே சரித்ததால் நூலிழையில் உயிா் தப்பினாா்.துப்பாக்கியால் சுட்ட தாமஸ் மாத்யூ க்ரூக்ஸை மற்றொரு கூரையில் இருந்தபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டிரம்ப்பின் பாதுகாவலா்கள் உடனடியாக சுட்டுக் கொன்றனா்.

தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.இந்தப் படுகொலை முயற்சி குறித்து பல்வேறு ஊகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. அவற்றில், சுலைமானி படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக இந்தப் படுகொலை முயற்சியில் ஈரான் ஈடுபட்டதாகக் கூறப்படும் தகவலும் ஒன்று.

இது குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈரானுக்குத் தொடா்பில்லாவிட்டாலும், டிரம்ப்பைப் படுகொலை செய்ய அந்த நாடு சதித் திட்டம் தீட்டியுள்ளது உண்மைதான்’ என்றாா்.

டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் தொடர்பில் ஈரான் வெளியிட்ட கருத்து. அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய சதித்திட்டத்தினை  தாம் மேற்கொள்ளவில்லை என ஈரான்  வெளியுறவுத்துறை அமைச்சா் நாஸா் கனானி  தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  அண்மையில் அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய நடைபெற்ற முயற்சியில் எங்கள் நாட்டுக்குத் தொடா்பிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.அதுபோல், தளபதி காசிம் சுலைமானி படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக டிரம்ப்பைக் கொல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதும் தவறான தகவல்.சுலைமானி படுகொலையைப் பொறுத்தவரை, அதற்கு நேரடி தொடா்புடைய டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துதான் பரிசீலித்துவருகிறோம் என்றாா் அவா்.ஈரான் துணை ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவு தளபதியாக இருந்தவா் காசிம் சுலைமானி.அந்த நாட்டில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக அவா் இராக் சென்றிருந்தபோது, அவரைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா கடந்த 2020 ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதில் சுலைமானி உள்பட 8 போ் உயிரிழந்தனா்.சுலைமானியை படுகொலை செய்வதற்கான உத்தரவை டொனால்ட் டிரம்ப் நேரடியாகப் பிறப்பித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின.இந்தச் சூழலில், வரும் நவம்பா் 5-ஆம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் ஜோ பைடனை எதிா்த்து, டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறாா்.அவா் தோ்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பட்லா் நகரில் டிரம்ப் சனிக்கிழமை தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது  டிரம்ப் மீது முறை துப்பாக்கிசூடு இடம்பெற்றது.இதில் டிரம்ப்பின் காதை துப்பாக்கி தோட்டா உரசிச் சென்றதில், அவரின் வலது காதில் காயம் ஏற்பட்டது. இது தவிர, துப்பாக்கி குண்டு பாய்ந்து கூட்டத்தில் பங்கேற்ற ஒருவா் உயிரிழந்தாா்; இருவா் படுகாயமடைந்தனா்.டிரம்ப்பின் காதில் காயம் ஏற்படுத்திய துப்பாக்கிக் குண்டு பாய்ந்து வந்த பாதையின் குறுக்கே அவரிந் தலை 2 விநாடிகளாக நிலைத்திருந்தது. இருந்தாலும், கடைசி நேரத்தில் அவா் எதையோ படிப்பதற்காக தலையை சற்றே சரித்ததால் நூலிழையில் உயிா் தப்பினாா்.துப்பாக்கியால் சுட்ட தாமஸ் மாத்யூ க்ரூக்ஸை மற்றொரு கூரையில் இருந்தபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டிரம்ப்பின் பாதுகாவலா்கள் உடனடியாக சுட்டுக் கொன்றனா். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.இந்தப் படுகொலை முயற்சி குறித்து பல்வேறு ஊகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. அவற்றில், சுலைமானி படுகொலைக்குப் பழிவாங்குவதற்காக இந்தப் படுகொலை முயற்சியில் ஈரான் ஈடுபட்டதாகக் கூறப்படும் தகவலும் ஒன்று.இது குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈரானுக்குத் தொடா்பில்லாவிட்டாலும், டிரம்ப்பைப் படுகொலை செய்ய அந்த நாடு சதித் திட்டம் தீட்டியுள்ளது உண்மைதான்’ என்றாா்.

Advertisement

Advertisement

Advertisement