ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்தை சந்தித்ததாகவும், ஹெலிகாப்டரில் இருந்த பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஹெலிகாப்டர்கள் பயணித்ததாகவும், அதில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா? அல்லது விபத்திற்கான காரணம் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறைந்தது 46 தேடல் மீட்புக் குழுக்கள் மற்றும் மோப்ப நாய்கள் இறக்கப்பட்டு ஈரானிய ஜனாதிபதியின் உலங்குவானூர்தியை தொடர்ந்து தேடுகின்றன.
கடுமையான மூடுபனியால் ஹெலிகாப்டர் கடுமையாக தரையிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகிலுள்ள பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும் மீட்பு பணிகள் மூடுபனியால் சிரமத்தில் உள்ளது.
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் . ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்தை சந்தித்ததாகவும், ஹெலிகாப்டரில் இருந்த பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று ஹெலிகாப்டர்கள் பயணித்ததாகவும், அதில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தின் போது ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா அல்லது விபத்திற்கான காரணம் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.குறைந்தது 46 தேடல் மீட்புக் குழுக்கள் மற்றும் மோப்ப நாய்கள் இறக்கப்பட்டு ஈரானிய ஜனாதிபதியின் உலங்குவானூர்தியை தொடர்ந்து தேடுகின்றன. கடுமையான மூடுபனியால் ஹெலிகாப்டர் கடுமையாக தரையிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகிலுள்ள பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும் மீட்பு பணிகள் மூடுபனியால் சிரமத்தில் உள்ளது.