• Nov 22 2024

பறவைக் காய்ச்சலால் இலங்கைக்கு ஆபத்தா..? சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

Chithra / Jun 23rd 2024, 12:56 pm
image


உலகின் சில நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் பறவைக் காய்ச்சல் தொடர்பான அபாயகரமான சூழல் இல்லையென்றாலும் அது குறித்து அவதானமாக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இலங்கை மக்களுக்கு இந்த வகையான நோய் ஆபத்து இல்லை என்பதை நாம் சொல்ல வேண்டும். உலக சுகாதார நிறுவனம் எங்களுக்கு எந்த சிறப்பு எச்சரிக்கையும் வழங்கவில்லை. 

பறவைக் காய்ச்சல் நிலைமை உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கு முன்பு பதிவாகிய போதும் அது தீவிரமாக பரவவில்லை. 

எனவே, இந்த விடயடம் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்" என்றார்.


பறவைக் காய்ச்சலால் இலங்கைக்கு ஆபத்தா. சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல் உலகின் சில நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.இந்த நாட்டில் பறவைக் காய்ச்சல் தொடர்பான அபாயகரமான சூழல் இல்லையென்றாலும் அது குறித்து அவதானமாக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்."இலங்கை மக்களுக்கு இந்த வகையான நோய் ஆபத்து இல்லை என்பதை நாம் சொல்ல வேண்டும். உலக சுகாதார நிறுவனம் எங்களுக்கு எந்த சிறப்பு எச்சரிக்கையும் வழங்கவில்லை. பறவைக் காய்ச்சல் நிலைமை உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கு முன்பு பதிவாகிய போதும் அது தீவிரமாக பரவவில்லை. எனவே, இந்த விடயடம் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்" என்றார்.

Advertisement

Advertisement

Advertisement