ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினராகி தேர்தல் அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதில் தனக்கு பிரச்சினை இல்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எனது உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டமையால் தான் சுயேட்சையாக இருப்பதாகவும், தான் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்மாதிரியான அரசியல் இயக்கத்திற்கான தேசிய இயக்கத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அண்மையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
18 அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் தேசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன் தலைவராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் திறன் தமக்கு இருப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் வலுவான நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், அதனை வலுப்படுத்துவதற்கு ஏதாவது பங்களிப்பை கோரினால் அதனை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவி தயாசிறிக்கு. அவரே வெளியிட்ட அறிவிப்பு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினராகி தேர்தல் அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதில் தனக்கு பிரச்சினை இல்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எனது உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டமையால் தான் சுயேட்சையாக இருப்பதாகவும், தான் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.முன்மாதிரியான அரசியல் இயக்கத்திற்கான தேசிய இயக்கத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அண்மையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.18 அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் தேசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன் தலைவராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் திறன் தமக்கு இருப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.அத்துடன் வலுவான நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், அதனை வலுப்படுத்துவதற்கு ஏதாவது பங்களிப்பை கோரினால் அதனை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.