• Feb 01 2026

குழந்தைகளுக்கு தேன் சிறந்ததா? வைத்தியர்கள் கூறுவது என்ன?

dileesiya / Jan 31st 2026, 4:16 pm
image


குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது பாதுகாப்பானதா என்ற கேள்வி மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது. 


குறிப்பாக பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் பாலசேகர் என்ற 4 வயது சிறுவனுக்கு வயிற்று வலிக்கு மருந்தாக தேன் கொடுக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென மயக்கமடைந்தார். 


உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாசன்,


“தேனில் உருவாகும் பொட்டுலினம் என்கிற நச்சுப் பொருள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்கும். இதனால் சுவாசமும் ரத்த ஓட்டமும் உடனடியாக பாதிக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.


மேலும், அந்தச் சிறுவனுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு, இம்யூனோகுளோபின் மருந்து அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


குழந்தை பிறந்த உடனே தேன் கொடுப்பது அல்லது தாய்ப்பாலுக்கு முன் தேன் கொடுப்பது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நீண்ட காலமாக இருந்து வரும் பழக்கம். வளைகுடா நாடுகளிலும் இந்த நடைமுறை காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியான ஆய்வின் படி,2022-ஆம் ஆண்டு சௌதி அரேபியாவில் நடத்தப்பட்ட இணையவழி ஆய்வில், 52% தாய்மார்கள் குழந்தைகளுக்கு தேன் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.


இந்த பழக்கம் குடல் அசைவின்மை முதல் சுவாசப் பிரச்னைகள் வரை பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.


ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது ‘இன்ஃபேன்ட் பொட்டுலிசம்’ எனப்படும் தீவிர நோயை ஏற்படுத்தும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) எச்சரிக்கிறது.


தேனை நேரடியாக மட்டுமல்லாமல்,உணவில்,தண்ணீரில்,திரவ உணவுகளில் எந்த வடிவிலும் குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என்றும் CDC தெளிவுபடுத்தியுள்ளது.


“குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது. தண்ணீர் கூட தேவையில்லை. சில பெற்றோர் ஆர்வத்திலும், தாய்ப்பால் போதவில்லையோ என்ற கவலையிலும் தேன் அல்லது பால் கொடுக்கின்றனர். இதுவே பொட்டுலிசம் பாதிப்புக்குக் காரணமாகிறது,” என 

மூத்த குழந்தைகள் நல மருத்துவர் வி. வித்யா தெரிவிக்கின்றார்.


இதற்குக் காரணமாக,பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக வளர்ந்திருக்காது.செரிமான சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்பதையும் அவர் விளக்கினார்.


இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளை உடனடியாக கண்டறிவது கடினம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சில முக்கிய அறிகுறிகள்:


குமட்டல், வாந்தி,தாய்ப்பால் குடிக்க மறுத்தல்,முக தசை சுருக்கம் அல்லது பிடிப்பு,மலச்சிக்கல்,உடல் வெப்பநிலை குறைவு,வலிப்பு,மூளை மற்றும் நரம்பு பாதிப்பு

சில மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இந்த நோய் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும்.


குழந்தைகளின் குடல் மற்றும் செரிமான அமைப்பு முழுமையாக வளர 12 மாதங்கள் ஆகும். 


அதனால் தான்,ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைக்கிறது.


“ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதில் பொதுவாக பிரச்சனை இல்லை. தேன் ஒரு இயற்கையான, ஆரோக்கியமான சர்க்கரை. ஆனால் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தேன்கூடஆபத்தானது,” என்று மருத்துவர் வித்யா தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு தேன் சிறந்ததா வைத்தியர்கள் கூறுவது என்ன குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது பாதுகாப்பானதா என்ற கேள்வி மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் பாலசேகர் என்ற 4 வயது சிறுவனுக்கு வயிற்று வலிக்கு மருந்தாக தேன் கொடுக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாசன்,“தேனில் உருவாகும் பொட்டுலினம் என்கிற நச்சுப் பொருள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்கும். இதனால் சுவாசமும் ரத்த ஓட்டமும் உடனடியாக பாதிக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.மேலும், அந்தச் சிறுவனுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு, இம்யூனோகுளோபின் மருந்து அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.குழந்தை பிறந்த உடனே தேன் கொடுப்பது அல்லது தாய்ப்பாலுக்கு முன் தேன் கொடுப்பது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நீண்ட காலமாக இருந்து வரும் பழக்கம். வளைகுடா நாடுகளிலும் இந்த நடைமுறை காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியான ஆய்வின் படி,2022-ஆம் ஆண்டு சௌதி அரேபியாவில் நடத்தப்பட்ட இணையவழி ஆய்வில், 52% தாய்மார்கள் குழந்தைகளுக்கு தேன் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.இந்த பழக்கம் குடல் அசைவின்மை முதல் சுவாசப் பிரச்னைகள் வரை பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது ‘இன்ஃபேன்ட் பொட்டுலிசம்’ எனப்படும் தீவிர நோயை ஏற்படுத்தும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) எச்சரிக்கிறது.தேனை நேரடியாக மட்டுமல்லாமல்,உணவில்,தண்ணீரில்,திரவ உணவுகளில் எந்த வடிவிலும் குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என்றும் CDC தெளிவுபடுத்தியுள்ளது.“குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது. தண்ணீர் கூட தேவையில்லை. சில பெற்றோர் ஆர்வத்திலும், தாய்ப்பால் போதவில்லையோ என்ற கவலையிலும் தேன் அல்லது பால் கொடுக்கின்றனர். இதுவே பொட்டுலிசம் பாதிப்புக்குக் காரணமாகிறது,” என மூத்த குழந்தைகள் நல மருத்துவர் வி. வித்யா தெரிவிக்கின்றார்.இதற்குக் காரணமாக,பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக வளர்ந்திருக்காது.செரிமான சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்பதையும் அவர் விளக்கினார்.இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளை உடனடியாக கண்டறிவது கடினம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சில முக்கிய அறிகுறிகள்:குமட்டல், வாந்தி,தாய்ப்பால் குடிக்க மறுத்தல்,முக தசை சுருக்கம் அல்லது பிடிப்பு,மலச்சிக்கல்,உடல் வெப்பநிலை குறைவு,வலிப்பு,மூளை மற்றும் நரம்பு பாதிப்புசில மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இந்த நோய் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும்.குழந்தைகளின் குடல் மற்றும் செரிமான அமைப்பு முழுமையாக வளர 12 மாதங்கள் ஆகும். அதனால் தான்,ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைக்கிறது.“ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதில் பொதுவாக பிரச்சனை இல்லை. தேன் ஒரு இயற்கையான, ஆரோக்கியமான சர்க்கரை. ஆனால் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தேன்கூடஆபத்தானது,” என்று மருத்துவர் வித்யா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement