• Jan 07 2025

மக்களுக்கு விஷத்தை வழங்கி வருமானத்தை அதிகரிப்பதுதான் அநுர அரசின் கொள்கையா? திஸ்ஸ அத்தநாயக்க விசனம்

Chithra / Jan 5th 2025, 8:31 am
image


மக்களுக்கு விஷத்தை வழங்கியாவது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையா?  என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது. 

குறைந்த விலையில் மதுபானத்தை பெற்றுக் கொள்வதற்காக சீனியில் உற்பத்தி செய்யப்படும் எதனோல் மூலம் மதுபானத்தை தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகின்றார்.

சட்டவிரோத மதுபானங்களை ஒழிப்பதற்காக குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய மதுபானத்தை அரசாங்கமே தயாரிப்பது தான் மாற்று வழியா? இதுவா அரசாங்கத்தின் கொள்கை? மக்களின் அத்தியாவசிய தேவை இதுவல்ல. 

மக்களின் வருமான வழியை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கை செலவை குறைப்தே அரசாங்கத்தின் பிரதான கடமையாகும்.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாகக் கூட சட்ட விரோத மதுபானம் உள்ளிட்டவற்றைக் அழிக்கலாம். அதனை விடுத்து குறைந்த விலையில் மதுபானத்தை தயாரிப்பது சமூகத்தில் பாரிய சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் என்றார்.


மக்களுக்கு விஷத்தை வழங்கி வருமானத்தை அதிகரிப்பதுதான் அநுர அரசின் கொள்கையா திஸ்ஸ அத்தநாயக்க விசனம் மக்களுக்கு விஷத்தை வழங்கியாவது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையா  என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது. குறைந்த விலையில் மதுபானத்தை பெற்றுக் கொள்வதற்காக சீனியில் உற்பத்தி செய்யப்படும் எதனோல் மூலம் மதுபானத்தை தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகின்றார்.சட்டவிரோத மதுபானங்களை ஒழிப்பதற்காக குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய மதுபானத்தை அரசாங்கமே தயாரிப்பது தான் மாற்று வழியா இதுவா அரசாங்கத்தின் கொள்கை மக்களின் அத்தியாவசிய தேவை இதுவல்ல. மக்களின் வருமான வழியை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கை செலவை குறைப்தே அரசாங்கத்தின் பிரதான கடமையாகும்.கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாகக் கூட சட்ட விரோத மதுபானம் உள்ளிட்டவற்றைக் அழிக்கலாம். அதனை விடுத்து குறைந்த விலையில் மதுபானத்தை தயாரிப்பது சமூகத்தில் பாரிய சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement