• Mar 28 2026

இலங்கையருக்கு சொந்த வீடு வெறும் கனவா? வெளியான அதிர்ச்சி அறிக்கை

Aathira / Mar 28th 2026, 12:51 pm
image

உலகப் புகழ்பெற்ற தி இகானமிஸ்ட் பத்திரிகை வெளியிட்ட புதிய அறிக்கை இலங்கையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அதாவது, ஆசியாவிலேயே வீடு வாங்குவதற்கு மிகவும் கடினமான நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசியா முழுவதும் மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு வேகமாக குடிபெயர்ந்து வருகிறார்கள். 

ஆனால் அவர்களுக்கு தேவையான மலிவான வீடுகள் கட்டப்படவில்லை. இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் இதே பிரச்சினை உள்ளது.

வீட்டு வசதி கட்டுப்படியாகாமல் போவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைகிறது, வேலை செய்யும் திறன் பாதிக்கப்படுகிறது, பொருளாதார வளர்ச்சியும் தடைபடுகிறது என்று அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

இனிவரும் காலங்களில் அரசாங்கங்கள் மலிவான வீட்டு வசதிக்காக பெரிய அளவில் முதலீடு செய்யாவிட்டால், நகரங்களில் நெரிசல் அதிகரிக்கும், ஏழை பணக்கார இடைவெளி பெரிதாகும், வாழ்க்கை நிலைமைகள் மேலும் மோசமாகும் என்று தி இகானமிஸ்ட் கடுமையாக எச்சரித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையருக்கு சொந்த வீடு வெறும் கனவா வெளியான அதிர்ச்சி அறிக்கை உலகப் புகழ்பெற்ற தி இகானமிஸ்ட் பத்திரிகை வெளியிட்ட புதிய அறிக்கை இலங்கையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ஆசியாவிலேயே வீடு வாங்குவதற்கு மிகவும் கடினமான நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.ஆசியா முழுவதும் மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு வேகமாக குடிபெயர்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான மலிவான வீடுகள் கட்டப்படவில்லை. இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் இதே பிரச்சினை உள்ளது.வீட்டு வசதி கட்டுப்படியாகாமல் போவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைகிறது, வேலை செய்யும் திறன் பாதிக்கப்படுகிறது, பொருளாதார வளர்ச்சியும் தடைபடுகிறது என்று அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.இனிவரும் காலங்களில் அரசாங்கங்கள் மலிவான வீட்டு வசதிக்காக பெரிய அளவில் முதலீடு செய்யாவிட்டால், நகரங்களில் நெரிசல் அதிகரிக்கும், ஏழை பணக்கார இடைவெளி பெரிதாகும், வாழ்க்கை நிலைமைகள் மேலும் மோசமாகும் என்று தி இகானமிஸ்ட் கடுமையாக எச்சரித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement