• Apr 05 2025

வெலிக்கடை பொலிஸ் நிலையம் சித்திரவதை கூடமா? உயிரிழந்த நடனக் கலைஞர்

Chithra / Apr 4th 2025, 10:42 am
image


வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பெபாலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர் பதுளை மீகஹகிவுலவைச் சேர்ந்த எம். சத்சர நிமேஷ் என்ற  26 வயதுடைய நடனக் கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற  அவசர பிரிவுக்கு அழைத்து குறித்த இளைஞனை பொலிஸாரிடம்  ஒப்படைத்தனர். 

பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் திடீர் சுகவீனம் காரணமாக முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் குறித்த இளைஞன் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்ததாகவும் இளைஞனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் நிர்வாக பணிப்பாளர் சட்டத்தரணி சேனக பெரேரா, பதில் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மரணம் மனிதாபிமானமற்ற தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என இதுவரை சந்தேகம் எழுந்துள்ளது.

சட்டத்தரணி சேனக பெரேரா, பதில் பொலிஸ்மா அதிபரிக்கு எழுதிய கோரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பதுளை மீகஹகிவுலயைச் சேர்ந்த எம். சாட்சர நிமேஷ் என்ற இளைஞனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். 

ராஜ் குமாரி என்ற பெண் பொலிஸ் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டு இறந்ததற்காக, கடமை தவறியதற்காக, தலைமை பொலிஸ் அதிகாரி சிந்தக என்ற அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும், ஆனால் அவர் இன்னும் வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரியாகவே செயல்படுகிறார்.

இவற்றுக்குப் யார் பொறுப்பு? ஒரு பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாடு இருக்கும்போது, ​​அந்தப் முறைப்பாட்டு ஆதார எண்ணைக் கூட பிரதிவாதிக்கு வழங்க அவர்கள் வெளிப்படையாக மறுக்கிறார்கள்.

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களை தாக்கி இவ்வாறு கொலை செய்வது யாருடைய அதிகார பலத்தால் நடக்கிறது?

பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இலங்கை பொலிஸ் சரியான பாதையில் செல்லும் என நாம் நம்பிக்கையுடன் உள்ளோம். மனிதர்களாகிய நாம் இவற்றுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெலிக்கடை பொலிஸாரால்  குறித்த நபர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொது அமைப்புக்கள் சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


வெலிக்கடை பொலிஸ் நிலையம் சித்திரவதை கூடமா உயிரிழந்த நடனக் கலைஞர் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பெபாலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பதுளை மீகஹகிவுலவைச் சேர்ந்த எம். சத்சர நிமேஷ் என்ற  26 வயதுடைய நடனக் கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற  அவசர பிரிவுக்கு அழைத்து குறித்த இளைஞனை பொலிஸாரிடம்  ஒப்படைத்தனர். பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் திடீர் சுகவீனம் காரணமாக முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞன் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்ததாகவும் இளைஞனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் நிர்வாக பணிப்பாளர் சட்டத்தரணி சேனக பெரேரா, பதில் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த மரணம் மனிதாபிமானமற்ற தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என இதுவரை சந்தேகம் எழுந்துள்ளது.சட்டத்தரணி சேனக பெரேரா, பதில் பொலிஸ்மா அதிபரிக்கு எழுதிய கோரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பதுளை மீகஹகிவுலயைச் சேர்ந்த எம். சாட்சர நிமேஷ் என்ற இளைஞனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். ராஜ் குமாரி என்ற பெண் பொலிஸ் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டு இறந்ததற்காக, கடமை தவறியதற்காக, தலைமை பொலிஸ் அதிகாரி சிந்தக என்ற அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும், ஆனால் அவர் இன்னும் வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரியாகவே செயல்படுகிறார்.இவற்றுக்குப் யார் பொறுப்பு ஒரு பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாடு இருக்கும்போது, ​​அந்தப் முறைப்பாட்டு ஆதார எண்ணைக் கூட பிரதிவாதிக்கு வழங்க அவர்கள் வெளிப்படையாக மறுக்கிறார்கள்.வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களை தாக்கி இவ்வாறு கொலை செய்வது யாருடைய அதிகார பலத்தால் நடக்கிறதுபதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இலங்கை பொலிஸ் சரியான பாதையில் செல்லும் என நாம் நம்பிக்கையுடன் உள்ளோம். மனிதர்களாகிய நாம் இவற்றுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெலிக்கடை பொலிஸாரால்  குறித்த நபர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொது அமைப்புக்கள் சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement