• Apr 05 2025

கச்சத்தீவு விவகாரம் - ஸ்டாலின், மோடிக்கு அவசர கடிதம்!

Chithra / Apr 4th 2025, 10:40 am
image


கச்சத்தீவை இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்து உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார். 

நரேந்திர மோடி இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில்,கச்சத்தீவு தொடர்பாக ஸ்டாலின்,மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

இதில், பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய கடற்றொழில் உரிமையைப் பாதுகாப்பதற்கு, கச்சத்தீவின் கட்டுப்பாடு இந்தியாவினால் மீட்கப்பட வேண்டியது கட்டாயமானது என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 

கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. 

கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டதன் விளைவாகவே, தமிழக மீனவர்களின் கடலுரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் - ஸ்டாலின், மோடிக்கு அவசர கடிதம் கச்சத்தீவை இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்து உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார். நரேந்திர மோடி இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில்,கச்சத்தீவு தொடர்பாக ஸ்டாலின்,மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இதில், பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய கடற்றொழில் உரிமையைப் பாதுகாப்பதற்கு, கச்சத்தீவின் கட்டுப்பாடு இந்தியாவினால் மீட்கப்பட வேண்டியது கட்டாயமானது என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டதன் விளைவாகவே, தமிழக மீனவர்களின் கடலுரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement