தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். திரையுலகில் ஒரு படத்திற்குப் பல கோடிகளை ஊதியமாகப் பெற்று வந்த விஜய், மக்கள் சேவகனாகப் பொறுப்பேற்ற பின் அவருக்குக் கிடைக்கவுள்ள சம்பளம் மற்றும் சலுகைகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தனது கடைசிப் படமான "ஜனநாயகன்" படத்துடன் திரைவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, "வசதியான வாழ்க்கையை விட மக்கள் சேவையே முக்கியம்" என அரசியலில் குதித்த விஜய்க்கு, இனி அதிகாரப்பூர்வ அரசாங்க ஊதியமே வருமானமாக இருக்கும்.
அவரது வேட்பு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்களின்படி, விஜய் பெயரில் ரூ.404.58 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.115.13 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.76 கோடி வரை கடனாக வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சருக்கான மாதாந்திர ஊதியம் சுமார் ரூ.2.05 லட்சம் என 2024ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அரசாணை கூறுகிறது.
சம்பளத்தைத் தாண்டி, ஒரு முதலமைச்சருக்கு அரசு வழங்கும் வசதிகள் மலைக்க வைக்கின்றன,
சென்னை கிரீன்வேஸ் சாலையில் வாடகை இல்லா அரசு பங்களா. பராமரிப்பு, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை அரசே ஏற்கும். சொந்த வீட்டில் தங்கினாலும் அது 'முதல்வர் இல்லம்' என்றே பராமரிக்கப்படும். மாநில காவல்துறையின் உயர்மட்ட பாதுகாப்புடன், மத்திய அரசின் 'இசட் பிளஸ்' (Z+) அந்தஸ்து கொண்ட பாதுகாப்பு.
மூன்று குண்டு துளைக்காத சிறப்பு வாகனங்கள் மற்றும் மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிபொருள் (Petrol Allowance). ஓட்டுநர்களின் ஊதியத்தையும் அரசே செலுத்தும்.
தனி ஹெலிகாப்டர் வசதி மற்றும் விமானப் பயணங்களுக்கான முழுச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்கும். முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விரிவான மருத்துவக் காப்பீடு. வீட்டிலும் அலுவலகத்திலும் பணியாற்றுவதற்குத் தேவையான ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கான ஊதியம்.
குறைந்த மாத சம்பளமாக இருந்தாலும், தமிழக முதலமைச்சர் பதவிக்கு உரிய பல்வேறு சலுகைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
எனினும் திரையுலகில் கோடிகளில் புரண்ட விஜய், தற்போது மக்கள் பணிக்காக குறைவான ஊதியத்தில் மிக உயரிய பொறுப்பை ஏற்கவுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கோடிகளில் புரண்ட விஜய்க்கு இனி இவ்வளவுதான் சம்பளம் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். திரையுலகில் ஒரு படத்திற்குப் பல கோடிகளை ஊதியமாகப் பெற்று வந்த விஜய், மக்கள் சேவகனாகப் பொறுப்பேற்ற பின் அவருக்குக் கிடைக்கவுள்ள சம்பளம் மற்றும் சலுகைகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.தனது கடைசிப் படமான "ஜனநாயகன்" படத்துடன் திரைவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, "வசதியான வாழ்க்கையை விட மக்கள் சேவையே முக்கியம்" என அரசியலில் குதித்த விஜய்க்கு, இனி அதிகாரப்பூர்வ அரசாங்க ஊதியமே வருமானமாக இருக்கும்.அவரது வேட்பு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்களின்படி, விஜய் பெயரில் ரூ.404.58 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.115.13 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.76 கோடி வரை கடனாக வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சருக்கான மாதாந்திர ஊதியம் சுமார் ரூ.2.05 லட்சம் என 2024ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அரசாணை கூறுகிறது. சம்பளத்தைத் தாண்டி, ஒரு முதலமைச்சருக்கு அரசு வழங்கும் வசதிகள் மலைக்க வைக்கின்றன,சென்னை கிரீன்வேஸ் சாலையில் வாடகை இல்லா அரசு பங்களா. பராமரிப்பு, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை அரசே ஏற்கும். சொந்த வீட்டில் தங்கினாலும் அது 'முதல்வர் இல்லம்' என்றே பராமரிக்கப்படும். மாநில காவல்துறையின் உயர்மட்ட பாதுகாப்புடன், மத்திய அரசின் 'இசட் பிளஸ்' (Z+) அந்தஸ்து கொண்ட பாதுகாப்பு.மூன்று குண்டு துளைக்காத சிறப்பு வாகனங்கள் மற்றும் மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிபொருள் (Petrol Allowance). ஓட்டுநர்களின் ஊதியத்தையும் அரசே செலுத்தும்.தனி ஹெலிகாப்டர் வசதி மற்றும் விமானப் பயணங்களுக்கான முழுச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்கும். முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விரிவான மருத்துவக் காப்பீடு. வீட்டிலும் அலுவலகத்திலும் பணியாற்றுவதற்குத் தேவையான ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கான ஊதியம்.குறைந்த மாத சம்பளமாக இருந்தாலும், தமிழக முதலமைச்சர் பதவிக்கு உரிய பல்வேறு சலுகைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.எனினும் திரையுலகில் கோடிகளில் புரண்ட விஜய், தற்போது மக்கள் பணிக்காக குறைவான ஊதியத்தில் மிக உயரிய பொறுப்பை ஏற்கவுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.