இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து, டிரம்ப்பின் சமூக வலைப்பக்கத்தில் கூறியதாவது, அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டன.
இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளும் முடிந்தவுடன், சுமார் 6 ஆறு மணிநேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும்.
அதனைத் தொடர்ந்து, 12 மணிநேரத்தில் இஸ்ரேலும் போர்நிறுத்தத்தைத் தொடங்கும். அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இந்தப் போர், பல ஆண்டுகளாக நடந்து, மத்திய கிழக்கையே அழித்திருக்க வேண்டிய ஒரு போராக அமைந்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அது ஒருபோதும் நடக்காது. என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே "முழுமையான போர் நிறுத்தம்" ஏற்பட்டதாக அறிவித்த சில மணி நேரங்களில் வெளியாகியுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்சி, X தளத்தில் வெளியிட்ட பதிவில், "தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமோ அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த ஒப்பந்தமோ இல்லை.
இருப்பினும், இஸ்ரேல் அரசு ஈரான் மக்கள் மீதான தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி காலை 4 மணிக்கு முன் நிறுத்தினால், அதற்கு பிறகு எங்கள் பதிலடி நடவடிக்கைகளை தொடர விருப்பமில்லை," என்று குறிப்பிட்டார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் டிரம்ப்பின் அறிவிப்பை மறுத்தது ஈரான் இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதுகுறித்து, டிரம்ப்பின் சமூக வலைப்பக்கத்தில் கூறியதாவது, அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டன. இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளும் முடிந்தவுடன், சுமார் 6 ஆறு மணிநேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து, 12 மணிநேரத்தில் இஸ்ரேலும் போர்நிறுத்தத்தைத் தொடங்கும். அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்தப் போர், பல ஆண்டுகளாக நடந்து, மத்திய கிழக்கையே அழித்திருக்க வேண்டிய ஒரு போராக அமைந்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அது ஒருபோதும் நடக்காது. என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே "முழுமையான போர் நிறுத்தம்" ஏற்பட்டதாக அறிவித்த சில மணி நேரங்களில் வெளியாகியுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்சி, X தளத்தில் வெளியிட்ட பதிவில், "தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமோ அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த ஒப்பந்தமோ இல்லை. இருப்பினும், இஸ்ரேல் அரசு ஈரான் மக்கள் மீதான தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி காலை 4 மணிக்கு முன் நிறுத்தினால், அதற்கு பிறகு எங்கள் பதிலடி நடவடிக்கைகளை தொடர விருப்பமில்லை," என்று குறிப்பிட்டார்.