தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் இரண்டு நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஐ.நா அமைதி காக்கும் படையில் கடமையாற்றிய, 2 இலங்கை அமைதி காக்கும் படையினர் காயமடைந்துள்ளனர்.
Naqoura வில் உள்ள UNIFIL இன் கண்காணிப்பு கோபுரங்கள் மீது விழுந்த ஷெல் ஒன்றின் துண்டுகளால் வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் மீதான இஸ்ரேலின் தாக்குதல் 'சகித்துக் கொள்ள முடியாதது மற்றும் மீண்டும் நடக்கக் கூடாது' என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்கூறியுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் உறுதிப்படுத்தியுள்ள இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார, தாக்குதலின் போது, இலங்கை இராணுவத்தினர் இருவரும் நகோரா கிராமத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முகாமில் இருந்ததாக கூறினார்.
லெபனான் மீது இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் - இலங்கை அமைதிப் படையினருக்கு ஏற்பட்ட கதி தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் இரண்டு நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதலில் ஐ.நா அமைதி காக்கும் படையில் கடமையாற்றிய, 2 இலங்கை அமைதி காக்கும் படையினர் காயமடைந்துள்ளனர்.Naqoura வில் உள்ள UNIFIL இன் கண்காணிப்பு கோபுரங்கள் மீது விழுந்த ஷெல் ஒன்றின் துண்டுகளால் வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் மீதான இஸ்ரேலின் தாக்குதல் 'சகித்துக் கொள்ள முடியாதது மற்றும் மீண்டும் நடக்கக் கூடாது' என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்கூறியுள்ளார்.இதேவேளை, சம்பவம் தொடர்பில் உறுதிப்படுத்தியுள்ள இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார, தாக்குதலின் போது, இலங்கை இராணுவத்தினர் இருவரும் நகோரா கிராமத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முகாமில் இருந்ததாக கூறினார்.