• Nov 21 2024

காஸாமீதான இஸ்ரேல் அரசின் இராணுவ அடக்குமுறை உடன் நிறுத்தப்பட வேண்டும்..! சபையில் சஜித் வேண்டுகோள்..!

Sharmi / May 14th 2024, 1:59 pm
image

காஸாமீதான இஸ்ரேல் அரசின் அனுசரணையுடனான இராணுவ அடக்குமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து  உரையாற்றுகையில்,

தற்போதைய இஸ்ரேல் அரசாங்கம் பலஸ்தீன் மக்களின் பூமியை ஆக்கிரமித்துக் கொண்ருக்கின்றது. 

புதிய மக்கள் குடியிருப்பை உருவாக்கிக் கொண்ருக்கின்றது. 

காஸா பகுதியில் இன்று செயற்படுத்தப்படுகின்ற மனிதப்படுகொலையானது பூமியில் இருக்கின்ற மக்களை அழித்தொழிக்கின்ற செயற்பாடாக இருக்கின்றது. 

அங்கு மக்களை அழிக்கப் பார்க்கிறார்கள், மருத்துவமனைகளுக்கு குண்டு வீசுகின்றார்கள், பாடசாலைகளுக்கு குண்டு வீசுகின்றார்கள், இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொள்கின்ற மனிதப் படுகொலை அரச பயங்கரவாதத்தை கடுமையாக கண்டிக்கின்றோம். 

எல்லோரும் நடுநிலைக்கு வந்து தீர்வைக் காண வேண்டும். ஆனால் இன்றைய இஸ்ரேல் அரசாங்கம் அடிப்படைவாத நிலைப்பாட்டில் இருந்து கொண்டு மேற்கொள்கின்ற மனிதப் படுகொலை ஹிட்லர் யூதர்கள் மீது மேற்கொண்ட குற்றத்திற்கு ஒத்ததானதாகும்.

பலஸ்தீன மக்களை முற்றுமுழுதாக அழித்தொழிப்பதற்கு துடிக்கின்றது. ஆதலால் அரச பயங்கரவாதம் உடன் நிறுத்தப்பட வேண்டும்  

நிரந்தரமான நட்பு உணர்வை  இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் நாம் உருவாக்குவதற்கு செயற்பட வேண்டும். 

மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றது. பிள்ளைகள்,தாய்மார்,பெண்கள், யுவதிகள்  , இளைஞர்கள் என ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களும்  அழிப்பதற்கான இந்த முயற்சியை இராணுவ நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கின்றோம். 

சமாதானத்திற்கு இடமளிக்க வேண்டும். அந்த அழிப்பிற்கு நெதர்னியோ பிரதமர் பொறுப்புக்கூற வேண்டும். ஹிட்லருடைய ஆட்சியில் யூதர்கள் மிலேச்சத்தனமாக அழிக்கப் பட்டார்கள் அதுபோலவே இஸ்ரேல் அரசும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

 இன்றைய இலங்கைப் பாராளுமன்றத்திலே இன்று நான் பிரகடணம் செய்கிறேன் எந்த தாமதமும் பின்னடைவும் இல்லாமல் இஸ்ரேலினுடைய அரச அனுசரனையுடனான அரச பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். இராணுவ அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்.

 இந்த அழிவுகள் மனிதன் என்ற வகையில் எவராலும் தாங்க முடியாதவை . இதனால் இவை உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் . ஜக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கின்றது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பெயரில்  இந்த படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பலஸ்தீன மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

அவர்களுக்கான வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும். உயிர் வாழ்வதற்கான உரிமையை பாதுகாக்க வேண்டும். இது மனிதநேய பிரச்சனையாக இருக்கின்றது. உலகம் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

காஸாமீதான இஸ்ரேல் அரசின் இராணுவ அடக்குமுறை உடன் நிறுத்தப்பட வேண்டும். சபையில் சஜித் வேண்டுகோள். காஸாமீதான இஸ்ரேல் அரசின் அனுசரணையுடனான இராணுவ அடக்குமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து  உரையாற்றுகையில்,தற்போதைய இஸ்ரேல் அரசாங்கம் பலஸ்தீன் மக்களின் பூமியை ஆக்கிரமித்துக் கொண்ருக்கின்றது. புதிய மக்கள் குடியிருப்பை உருவாக்கிக் கொண்ருக்கின்றது. காஸா பகுதியில் இன்று செயற்படுத்தப்படுகின்ற மனிதப்படுகொலையானது பூமியில் இருக்கின்ற மக்களை அழித்தொழிக்கின்ற செயற்பாடாக இருக்கின்றது. அங்கு மக்களை அழிக்கப் பார்க்கிறார்கள், மருத்துவமனைகளுக்கு குண்டு வீசுகின்றார்கள், பாடசாலைகளுக்கு குண்டு வீசுகின்றார்கள், இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொள்கின்ற மனிதப் படுகொலை அரச பயங்கரவாதத்தை கடுமையாக கண்டிக்கின்றோம். எல்லோரும் நடுநிலைக்கு வந்து தீர்வைக் காண வேண்டும். ஆனால் இன்றைய இஸ்ரேல் அரசாங்கம் அடிப்படைவாத நிலைப்பாட்டில் இருந்து கொண்டு மேற்கொள்கின்ற மனிதப் படுகொலை ஹிட்லர் யூதர்கள் மீது மேற்கொண்ட குற்றத்திற்கு ஒத்ததானதாகும்.பலஸ்தீன மக்களை முற்றுமுழுதாக அழித்தொழிப்பதற்கு துடிக்கின்றது. ஆதலால் அரச பயங்கரவாதம் உடன் நிறுத்தப்பட வேண்டும்  நிரந்தரமான நட்பு உணர்வை  இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் நாம் உருவாக்குவதற்கு செயற்பட வேண்டும். மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றது. பிள்ளைகள்,தாய்மார்,பெண்கள், யுவதிகள்  , இளைஞர்கள் என ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களும்  அழிப்பதற்கான இந்த முயற்சியை இராணுவ நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கின்றோம். சமாதானத்திற்கு இடமளிக்க வேண்டும். அந்த அழிப்பிற்கு நெதர்னியோ பிரதமர் பொறுப்புக்கூற வேண்டும். ஹிட்லருடைய ஆட்சியில் யூதர்கள் மிலேச்சத்தனமாக அழிக்கப் பட்டார்கள் அதுபோலவே இஸ்ரேல் அரசும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.  இன்றைய இலங்கைப் பாராளுமன்றத்திலே இன்று நான் பிரகடணம் செய்கிறேன் எந்த தாமதமும் பின்னடைவும் இல்லாமல் இஸ்ரேலினுடைய அரச அனுசரனையுடனான அரச பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். இராணுவ அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும். இந்த அழிவுகள் மனிதன் என்ற வகையில் எவராலும் தாங்க முடியாதவை . இதனால் இவை உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் . ஜக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கின்றது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பெயரில்  இந்த படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பலஸ்தீன மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கான வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும். உயிர் வாழ்வதற்கான உரிமையை பாதுகாக்க வேண்டும். இது மனிதநேய பிரச்சனையாக இருக்கின்றது. உலகம் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement