• Nov 24 2024

ரஸ்யா - உக்ரைனில் போராடும் இலங்கையர்களை கண்டுபிடிப்பது கடினம்! - கைவிரித்தது இலங்கை அரசு?

Chithra / Jul 10th 2024, 1:25 pm
image

 

ரஸ்ய இராணுவத்துடன் இணைந்து உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையர்கள் குறித்து 464 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார  இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

பல இலங்கையர்கள் இந்தியா அல்லது மத்தியகிழக்கு ஊடாக வழமைக்கு மாறான பாதைகள் மூலம் ரஸ்யா சென்றுள்ளதால் போரிடுவதற்காக எத்தனை இலங்கையர்கள் ரஸ்யா சென்றுள்ளனர் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து நேரடியாக சென்றவர்கள் குறித்த விபரங்களை பெறுவதும் கடினமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும்  464 முறைப்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவில் போரிட்ட வேளை உயிரிழந்தவர்களிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  

ரஸ்யாவிற்கு செல்லும் இவர்கள் ரஸ்ய இராணுவத்துடன் இணைந்து போரிடுவது குறித்த ஆவணங்களில் கைச்சாத்திடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

அவர்கள் இது குறித்து தாங்கள் அறியவில்லை என தெரிவித்தாலும் இந்த உடன்படிக்கைகள் சட்டபூர்வமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா - உக்ரைனில் போராடும் இலங்கையர்களை கண்டுபிடிப்பது கடினம் - கைவிரித்தது இலங்கை அரசு  ரஸ்ய இராணுவத்துடன் இணைந்து உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையர்கள் குறித்து 464 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார  இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.பல இலங்கையர்கள் இந்தியா அல்லது மத்தியகிழக்கு ஊடாக வழமைக்கு மாறான பாதைகள் மூலம் ரஸ்யா சென்றுள்ளதால் போரிடுவதற்காக எத்தனை இலங்கையர்கள் ரஸ்யா சென்றுள்ளனர் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையிலிருந்து நேரடியாக சென்றவர்கள் குறித்த விபரங்களை பெறுவதும் கடினமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.எனினும்  464 முறைப்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ரஸ்யாவில் போரிட்ட வேளை உயிரிழந்தவர்களிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  ரஸ்யாவிற்கு செல்லும் இவர்கள் ரஸ்ய இராணுவத்துடன் இணைந்து போரிடுவது குறித்த ஆவணங்களில் கைச்சாத்திடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.அவர்கள் இது குறித்து தாங்கள் அறியவில்லை என தெரிவித்தாலும் இந்த உடன்படிக்கைகள் சட்டபூர்வமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement