• Nov 19 2024

இவர்கள் பதவி விலகியது நல்லது தான் - நுகர்வோர் விவகார ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநர்கள் குழுவை கிழித்து தொங்கவிட்ட அசேல சம்பத்..!samugammedia

Tharun / Mar 10th 2024, 11:22 am
image

நுகர்வோர் விவகார ஆணையத்தின் தலைவர் நல்ல மனிதர் ஆனால், அவரை வேலை செய்யவிடாமல் நுகர்வோர் சபையை வீணடித்துவிட்டார்கள். உண்மையில் இவர்கள் விலகியது எங்களுக்கு நல்லதுதான் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் (9) கொழும்பில்  இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நடைபெற்ற  ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல உள்ளிட்ட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை நேற்று முன்தினம் (8)  பதவி விலகல் செய்துள்ளது. நுகர்வோர் விவகார ஆணைய உறுப்பினர்கள் பதவி விலகி வேலை இல்லை. அவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டுள்ளது. இதற்கு சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அங்கு இடம்பெற்றுள்ள மோசடிகளுக்கு  அமைச்சரும் பதில் கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் இது குறித்து தெரிவிக்கையில், 

நாங்கள் இம்மோசடிக்கு எதிராக நாங்கள் போராட்டம் செய்து தற்போதுதான் தீர்வு கிடைத்துள்ளது. தற்போது அரசியல்வாதிகளை இதற்கு தலைவராக்காமல் எங்களை போன்ற அனுபவசாலிகளை பதவியில் அமர்த்துங்கள். எனவும் தெரிவித்துள்ளார். 

எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி இவர்கள் பதவி விலகியது அமைச்சரின் பேச்சிற்கு இணங்க இம்முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அங்கு எதிர் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே தலைவர் பதவி காலியாக உள்ளது. எங்களிற்கு அந்த பதவி  வேண்டும். நான் பதவிக்கு  வந்தால் யாரும் எதும் செய்ய முடியாது.  கண்டிப்பாக எனக்கு ஒரு பதவி  வேண்டும். ஒரு வாரத்தில் நான் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகிறேன்.

மேலும் இன்று மரக்கறி விலைகள் வானளவு உயர்ந்துள்ளது. மக்கள் இவற்றை சமாளிப்பது எப்படி?

 40 மில்லியன்  முட்டை கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்தியாவில் இருந்து கொண்டு வாங்கும் முட்டையின் விலை என்னவென்று கூறுங்கள்?

எங்களுக்கு இம் முட்டைகளை 43 ரூபாவுக்கு விற்கிறார்கள். ஒரு சாதாரண முட்டையை கூட நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத நாடாக உள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை அங்கு என்ன விலைக்கு  கொள்வனவு செய்யப்படுகிறது என்று யாருக்கும் தெரியாது. நாங்கள் கூறுவது இவ்விடத்தில் பாரிய மோசடி ஏற்படுகிறது. இம்முட்டைகளை கொண்டு வந்து பாரிய மோசடிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் பதவி விலகியது நல்லது தான் - நுகர்வோர் விவகார ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநர்கள் குழுவை கிழித்து தொங்கவிட்ட அசேல சம்பத்.samugammedia நுகர்வோர் விவகார ஆணையத்தின் தலைவர் நல்ல மனிதர் ஆனால், அவரை வேலை செய்யவிடாமல் நுகர்வோர் சபையை வீணடித்துவிட்டார்கள். உண்மையில் இவர்கள் விலகியது எங்களுக்கு நல்லதுதான் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (9) கொழும்பில்  இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் நடைபெற்ற  ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல உள்ளிட்ட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை நேற்று முன்தினம் (8)  பதவி விலகல் செய்துள்ளது. நுகர்வோர் விவகார ஆணைய உறுப்பினர்கள் பதவி விலகி வேலை இல்லை. அவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டுள்ளது. இதற்கு சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அங்கு இடம்பெற்றுள்ள மோசடிகளுக்கு  அமைச்சரும் பதில் கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து தெரிவிக்கையில், நாங்கள் இம்மோசடிக்கு எதிராக நாங்கள் போராட்டம் செய்து தற்போதுதான் தீர்வு கிடைத்துள்ளது. தற்போது அரசியல்வாதிகளை இதற்கு தலைவராக்காமல் எங்களை போன்ற அனுபவசாலிகளை பதவியில் அமர்த்துங்கள். எனவும் தெரிவித்துள்ளார். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி இவர்கள் பதவி விலகியது அமைச்சரின் பேச்சிற்கு இணங்க இம்முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அங்கு எதிர் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே தலைவர் பதவி காலியாக உள்ளது. எங்களிற்கு அந்த பதவி  வேண்டும். நான் பதவிக்கு  வந்தால் யாரும் எதும் செய்ய முடியாது.  கண்டிப்பாக எனக்கு ஒரு பதவி  வேண்டும். ஒரு வாரத்தில் நான் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகிறேன்.மேலும் இன்று மரக்கறி விலைகள் வானளவு உயர்ந்துள்ளது. மக்கள் இவற்றை சமாளிப்பது எப்படி 40 மில்லியன்  முட்டை கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்தியாவில் இருந்து கொண்டு வாங்கும் முட்டையின் விலை என்னவென்று கூறுங்கள்எங்களுக்கு இம் முட்டைகளை 43 ரூபாவுக்கு விற்கிறார்கள். ஒரு சாதாரண முட்டையை கூட நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத நாடாக உள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை அங்கு என்ன விலைக்கு  கொள்வனவு செய்யப்படுகிறது என்று யாருக்கும் தெரியாது. நாங்கள் கூறுவது இவ்விடத்தில் பாரிய மோசடி ஏற்படுகிறது. இம்முட்டைகளை கொண்டு வந்து பாரிய மோசடிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement