• May 20 2025

வங்கிக் கணக்குகளைத் ஆரம்பிக்கவும் TIN இலக்கம் கட்டாயம்

Chithra / May 20th 2025, 2:40 pm
image


2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

2025.04.01 அன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வரி வீதம் 5% சதவீதம் தொடக்கம் 10% சதவீதம் வரை அதிகரிப்பதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் 2025 ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

வரி அறவிடப்படுகின்ற வருடாந்த வருமான எல்லையான 1.8 மில்லியன் ரூபாய்களை விஞ்சாத வருமானத்தைக் கொண்ட நபர்களின் தக்க வைக்கப்பட்ட வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அவ்வாறான வைப்பாளர்கள் மற்றும் குறைந்த வருமானங் கொண்டவர்கள் சிரமங்களுக்கு உள்ளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

குறித்த பிரச்சினைக்கான தீர்வாக வரி விடுப்புக்குக் குறைவான வருமானத்தைக் கொண்டுள்ள நபர்களுக்கு சுயபிரகடனத்தைச் சமர்ப்பிக்கின்ற முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 

அதற்கிணங்க, வட்டி மீதான தக்க வைக்கப்பட்ட வரியை அறவிடுவதிலிருந்து விடுவிப்பதற்கு 1.8 மில்லியன் ரூபாய்களை விஞ்சாத மதிப்பீட்டு வருமானத்துடன் கூடிய அனைத்து நிலையான வைப்பாளர்களுக்கு சுயபிரகடனத்தை அறிமுகப்படுத்துவதற்கும் மற்றும் அனைத்து வகையான வங்கிக் கணக்குகளையும் திறப்பதற்காக வரி அறிமுக இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பதற்குக் கட்டாயமாக்கும் தகுந்த திருத்தத்தை உள்வாங்கி 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்திற்கான திருத்தம் செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


வங்கிக் கணக்குகளைத் ஆரம்பிக்கவும் TIN இலக்கம் கட்டாயம் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025.04.01 அன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வரி வீதம் 5% சதவீதம் தொடக்கம் 10% சதவீதம் வரை அதிகரிப்பதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் 2025 ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரி அறவிடப்படுகின்ற வருடாந்த வருமான எல்லையான 1.8 மில்லியன் ரூபாய்களை விஞ்சாத வருமானத்தைக் கொண்ட நபர்களின் தக்க வைக்கப்பட்ட வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அவ்வாறான வைப்பாளர்கள் மற்றும் குறைந்த வருமானங் கொண்டவர்கள் சிரமங்களுக்கு உள்ளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினைக்கான தீர்வாக வரி விடுப்புக்குக் குறைவான வருமானத்தைக் கொண்டுள்ள நபர்களுக்கு சுயபிரகடனத்தைச் சமர்ப்பிக்கின்ற முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வட்டி மீதான தக்க வைக்கப்பட்ட வரியை அறவிடுவதிலிருந்து விடுவிப்பதற்கு 1.8 மில்லியன் ரூபாய்களை விஞ்சாத மதிப்பீட்டு வருமானத்துடன் கூடிய அனைத்து நிலையான வைப்பாளர்களுக்கு சுயபிரகடனத்தை அறிமுகப்படுத்துவதற்கும் மற்றும் அனைத்து வகையான வங்கிக் கணக்குகளையும் திறப்பதற்காக வரி அறிமுக இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பதற்குக் கட்டாயமாக்கும் தகுந்த திருத்தத்தை உள்வாங்கி 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்திற்கான திருத்தம் செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement