• Sep 19 2024

சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது எனது பொறுப்பு! - ஜனாதிபதி ரணில்

Chithra / Feb 6th 2023, 7:15 am
image

Advertisement

சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது அரச தலைவர் என்ற ரீதியிலும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை அண்மையில் சந்தித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது அரசியலமைப்பின் முழுமை நடைமுறைக்கு மகாநாயக்கர்கள் இருவரும் தமது ஆட்சேபனையை வெளியிட்டனர்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் அதனை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் 13ஆம் திருத்தத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னரும் பல வருடங்களாக இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டம் ஒன்றை அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது தமது பொறுப்பு என்றும் அவர் கூறியதாக தேசிய ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னதாக அதனை முழுமையாக அமுலாக்குவதற்கு இந்தியா தமது வலியுறுத்தலை தொடர்ந்தும் விடுத்து வருகிறது.

எனினும், தென்னிலங்கையின் சிங்கள கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்தநிலையில் இந்திய பிரதமரின் அழைப்பின் பேரில், விரைவில் எதிர்பார்க்கப்படும் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின்போது இது தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது எனது பொறுப்பு - ஜனாதிபதி ரணில் சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது அரச தலைவர் என்ற ரீதியிலும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார்.அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை அண்மையில் சந்தித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.13ஆவது அரசியலமைப்பின் முழுமை நடைமுறைக்கு மகாநாயக்கர்கள் இருவரும் தமது ஆட்சேபனையை வெளியிட்டனர்.அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் அதனை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எனினும் 13ஆம் திருத்தத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னரும் பல வருடங்களாக இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டில் சட்டம் ஒன்றை அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது தமது பொறுப்பு என்றும் அவர் கூறியதாக தேசிய ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.முன்னதாக அதனை முழுமையாக அமுலாக்குவதற்கு இந்தியா தமது வலியுறுத்தலை தொடர்ந்தும் விடுத்து வருகிறது.எனினும், தென்னிலங்கையின் சிங்கள கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.இந்தநிலையில் இந்திய பிரதமரின் அழைப்பின் பேரில், விரைவில் எதிர்பார்க்கப்படும் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின்போது இது தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement