• Nov 24 2024

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவது முடியாத காரியம்...! ரணிலையே மக்கள் தெரிவு செய்வர்..! மன்னாரில் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

Chithra / Dec 28th 2023, 8:26 am
image


நாட்டில் ஏற்பட்டுள்ள கஷ்டத்தை போக்கியது  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. எனவே எனது ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கே  என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிறுவன பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று நேற்று மாலை மன்னார்  உப்பு உற்பத்தி நிலையத்தில் இடம் பெற்ற போதே அவர் அங்கு இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் ஒருவரை ஜனாதிபதியாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.  அது முடியாத காரியம்.

தமிழர் ஒருவர் எவ்வாறு ஜனாதிபதியாக வர முடியும்...? ஜனாதிபதியாக தெரிவு செய்ய எத்தனை வாக்குகள் தேவை? தமிழர்களின் வாக்குகள் எத்தனை உள்ளது.

அதிகமானவர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே தெரிவு செய்வார்கள்.

கடந்த காலங்களில் மக்கள் எதிர் நோக்கிய பிரச்சனை மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என தெரிவித்தார்.

 

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவது முடியாத காரியம். ரணிலையே மக்கள் தெரிவு செய்வர். மன்னாரில் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள கஷ்டத்தை போக்கியது  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. எனவே எனது ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கே  என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிறுவன பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று நேற்று மாலை மன்னார்  உப்பு உற்பத்தி நிலையத்தில் இடம் பெற்ற போதே அவர் அங்கு இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழர் ஒருவரை ஜனாதிபதியாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.  அது முடியாத காரியம்.தமிழர் ஒருவர் எவ்வாறு ஜனாதிபதியாக வர முடியும். ஜனாதிபதியாக தெரிவு செய்ய எத்தனை வாக்குகள் தேவை தமிழர்களின் வாக்குகள் எத்தனை உள்ளது.அதிகமானவர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே தெரிவு செய்வார்கள்.கடந்த காலங்களில் மக்கள் எதிர் நோக்கிய பிரச்சனை மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement