• Nov 26 2024

தமிழ் தேசிய கூட்டமைப்பாக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்- கோவிந்தன் எம்.பி சுட்டிக்காட்டு..!

Sharmi / Jul 13th 2024, 2:35 pm
image

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஆனால் வீட்டுச் சின்னம் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது.அடுத்த தேர்தலில் அதுவெளியில் வருவதே சந்தேகம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்துள்ளதன் காரணமாக பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கமுடியாது என்றவகையில் சிலர் பேசிவருவதாகவும், ஆனால் கட்சி செயற்பாடுகளுக்கும் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவிக்கும் தொடர்பு இல்லையென்ற காரணத்தினால் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள செல்வம் அடைக்கலநாதனை பாராளுமன்ற குழுக்களின் தலைவராக நியமிக்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை,  மட்டக்களப்பில் தங்களால் முன்மொழியப்படும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது தமக்கு அழைப்பு விடுவதற்கு அரச ஆதரவு அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சம் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பாக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்- கோவிந்தன் எம்.பி சுட்டிக்காட்டு. அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஆனால் வீட்டுச் சின்னம் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது.அடுத்த தேர்தலில் அதுவெளியில் வருவதே சந்தேகம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்துள்ளதன் காரணமாக பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கமுடியாது என்றவகையில் சிலர் பேசிவருவதாகவும், ஆனால் கட்சி செயற்பாடுகளுக்கும் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவிக்கும் தொடர்பு இல்லையென்ற காரணத்தினால் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள செல்வம் அடைக்கலநாதனை பாராளுமன்ற குழுக்களின் தலைவராக நியமிக்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அதேவேளை,  மட்டக்களப்பில் தங்களால் முன்மொழியப்படும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது தமக்கு அழைப்பு விடுவதற்கு அரச ஆதரவு அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சம் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement