• Dec 14 2024

ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய ஜெட் விமானம்...!

Anaath / Jul 13th 2024, 2:03 pm
image

ரஷ்யாவில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஜெட் விமானம் ஒன்று  தீப்பிடித்ததில் விமானிகள் மூவர் உயிரிழந்துள்ளனர்

குறித்த விடயம் தொடர்பில் மேலும்  தெரிய வருவதாவது, அந்த ஜெட் விமானமானது  பயணிகள் இல்லாத நிலையில் மாஸ்கோவின் வினுகோவா விமான நிலையத்தை நோக்கி பயிற்சிக்காக  சென்ற போது, விமானத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக நாட்டின் உயர்மட்ட மாநில குற்றப் புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மாஸ்கோ விமான நிலையம் ஒன்றில் இதே வகை சுகோய் சூப்பர்ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய ஜெட் விமானம். ரஷ்யாவில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஜெட் விமானம் ஒன்று  தீப்பிடித்ததில் விமானிகள் மூவர் உயிரிழந்துள்ளனர்குறித்த விடயம் தொடர்பில் மேலும்  தெரிய வருவதாவது, அந்த ஜெட் விமானமானது  பயணிகள் இல்லாத நிலையில் மாஸ்கோவின் வினுகோவா விமான நிலையத்தை நோக்கி பயிற்சிக்காக  சென்ற போது, விமானத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து தொடர்பாக நாட்டின் உயர்மட்ட மாநில குற்றப் புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு மாஸ்கோ விமான நிலையம் ஒன்றில் இதே வகை சுகோய் சூப்பர்ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement