• Apr 30 2026

யாழில் இருந்து கொழும்புக்கு வர 15 லீற்றர் எரிபொருள்; இதில் எப்படி வந்து சேர்வது! சபையில் குழம்பிய அர்ச்சுனா

Chithra / Mar 17th 2026, 9:07 pm
image

 யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு 15 லீற்றர் எரிபொருள் தான் வழங்கப்பட்டுள்ளது.  வடக்கிலிருந்து கட்டுநாயக்க செல்பவர்கள் அநுராதபுரத்தில் தூங்க வேண்டும். அதன் பின்னர் வடக்கிற்கு திரும்ப கட்டுநாயக்கவில் ஒருவாரம் தூங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் எரிபொருள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாகனங்களுக்கு தற்போது மட்டுப்படுத்தப்பட்டு எரிபொருள் வழங்கப்படுகின்றது. எங்களுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு 15 லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. 

நான் அங்கிருந்து வெளிக்கிட்டு நேற்று இரவு அநுராதபுரத்தில் தூங்கிவிட்டு அடுத்த வார எரிபொருளைப் பெற்றுத் தான் கொழும்புக்கு வந்து சேர்ந்தேன்.  

வடக்கிலிருந்து கட்டுநாயக்க பயணிப்பவர்கள் அநுராதபுரத்தில் தான் தூங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து கட்டுநாயக்க செல்ல வேண்டும். 

அதன்பின்னர் கட்டுநாயக்கவில் ஒருவாரம் தூங்கிவிட்டு அங்கு எரிபொருள் பெற்று பின்னர் வவுனியா வரை வந்தடைவர். 

அதன்பின்னர் வவுனியாவில் ஒருவார காலம் தங்கி தூங்கி விட்டு தான் 15 லீற்றர் பெற்றோலைப் பெற்று  வடக்கிற்கு செல்ல வேண்டும். இப்படி நிலை என்றால் வடக்கிலிருந்து தெற்கிற்கு வருவதற்கு ஒரு மாதம் வேண்டும். 

புலம்பெயர்ந்தோர் எனக்கு வாகனங்கள் வழங்குவார்கள். எனக்குப் பிரச்சினை இல்லை. எனக்கு எண்ணெய் தேவையில்லை. நான் கவலைப்படுவது வாக்களித்த அப்பாவி பொதுமக்கள் பற்றி. முச்சக்கரவண்டி சாரதிகள் பற்றி தான். நான் BYD இல் பயணிக்கின்ற போது மக்கள் என்னைப் பார்க்கின்றார்கள். 

பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள்.  பஸ்ஸிலும் ரயிலிலும் பயணிக்கலாம் என்று. நான் அதனைப் பார்க்க ஆசைப்படுகின்றேன். அவர்கள் பஸ்ஸிலும், ரயிலிலும் பயணித்தால் நான் வடக்கிலிருந்து தெற்கிற்கு நடந்து வருவேன். 

எனக்கு எரிபொருள் தேவையில்லை. எனக்கு BYD இருக்கிறது. எண்ணெய் தேவைப்படாது. சாதாரண விவசாயிகளுக்கு 30 லீற்றர், 40 லீற்றர் எப்படி போதுமானதாக இருக்கும். 

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எவ்வாறு எரிபொருள் போதுமானதாக இருக்கும் என்று சிந்தியுங்கள் என மேலும் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர் இதனை பாராளுமன்ற குழுச் செயலாளரிடம் தெரிவிக்கின்றேன். இது தொடர்பில் பரிசீலித்து பதில் வழங்கப்படும் என்றார்.

இதேவேளை பொய் பெரேரா என்று  பாராளுமன்ற உறுப்பினருக்கு  பெயரை சூட்ட முடியும் என்றால் பொய் அநுர என்றும் கூறமுடியும்.  இன்றுவரையும் அவர்கள் பொய்யைத் தான் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். தயவு செய்து அதை நீக்கி உறுப்பினர் ஒருவரை அவ்வாறு சொல்ல வேண்டாம் எனக் கேட்கின்றேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா  தெரிவித்தார்.

யாழில் இருந்து கொழும்புக்கு வர 15 லீற்றர் எரிபொருள்; இதில் எப்படி வந்து சேர்வது சபையில் குழம்பிய அர்ச்சுனா  யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு 15 லீற்றர் எரிபொருள் தான் வழங்கப்பட்டுள்ளது.  வடக்கிலிருந்து கட்டுநாயக்க செல்பவர்கள் அநுராதபுரத்தில் தூங்க வேண்டும். அதன் பின்னர் வடக்கிற்கு திரும்ப கட்டுநாயக்கவில் ஒருவாரம் தூங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் எரிபொருள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வாகனங்களுக்கு தற்போது மட்டுப்படுத்தப்பட்டு எரிபொருள் வழங்கப்படுகின்றது. எங்களுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு 15 லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. நான் அங்கிருந்து வெளிக்கிட்டு நேற்று இரவு அநுராதபுரத்தில் தூங்கிவிட்டு அடுத்த வார எரிபொருளைப் பெற்றுத் தான் கொழும்புக்கு வந்து சேர்ந்தேன்.  வடக்கிலிருந்து கட்டுநாயக்க பயணிப்பவர்கள் அநுராதபுரத்தில் தான் தூங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து கட்டுநாயக்க செல்ல வேண்டும். அதன்பின்னர் கட்டுநாயக்கவில் ஒருவாரம் தூங்கிவிட்டு அங்கு எரிபொருள் பெற்று பின்னர் வவுனியா வரை வந்தடைவர். அதன்பின்னர் வவுனியாவில் ஒருவார காலம் தங்கி தூங்கி விட்டு தான் 15 லீற்றர் பெற்றோலைப் பெற்று  வடக்கிற்கு செல்ல வேண்டும். இப்படி நிலை என்றால் வடக்கிலிருந்து தெற்கிற்கு வருவதற்கு ஒரு மாதம் வேண்டும். புலம்பெயர்ந்தோர் எனக்கு வாகனங்கள் வழங்குவார்கள். எனக்குப் பிரச்சினை இல்லை. எனக்கு எண்ணெய் தேவையில்லை. நான் கவலைப்படுவது வாக்களித்த அப்பாவி பொதுமக்கள் பற்றி. முச்சக்கரவண்டி சாரதிகள் பற்றி தான். நான் BYD இல் பயணிக்கின்ற போது மக்கள் என்னைப் பார்க்கின்றார்கள். பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள்.  பஸ்ஸிலும் ரயிலிலும் பயணிக்கலாம் என்று. நான் அதனைப் பார்க்க ஆசைப்படுகின்றேன். அவர்கள் பஸ்ஸிலும், ரயிலிலும் பயணித்தால் நான் வடக்கிலிருந்து தெற்கிற்கு நடந்து வருவேன். எனக்கு எரிபொருள் தேவையில்லை. எனக்கு BYD இருக்கிறது. எண்ணெய் தேவைப்படாது. சாதாரண விவசாயிகளுக்கு 30 லீற்றர், 40 லீற்றர் எப்படி போதுமானதாக இருக்கும். சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எவ்வாறு எரிபொருள் போதுமானதாக இருக்கும் என்று சிந்தியுங்கள் என மேலும் தெரிவித்தார்.அதற்குப் பதிலளித்த சபாநாயகர் இதனை பாராளுமன்ற குழுச் செயலாளரிடம் தெரிவிக்கின்றேன். இது தொடர்பில் பரிசீலித்து பதில் வழங்கப்படும் என்றார்.இதேவேளை பொய் பெரேரா என்று  பாராளுமன்ற உறுப்பினருக்கு  பெயரை சூட்ட முடியும் என்றால் பொய் அநுர என்றும் கூறமுடியும்.  இன்றுவரையும் அவர்கள் பொய்யைத் தான் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். தயவு செய்து அதை நீக்கி உறுப்பினர் ஒருவரை அவ்வாறு சொல்ல வேண்டாம் எனக் கேட்கின்றேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement